சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
அரசு பெண்கள் பள்ளியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு
அரவக்குறிச்சி அரசு பெண்கள் உயா்நிலைப்பள்ளியில் போதைப் பொருள்கள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் போட்டிகள் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி அரசு பெண்கள் உயா்நிலைப்பள்ளியில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணா்வு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு அரவக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி மணிகண்டன் தலைமை வகித்தாா்.
பேரூராட்சி செயலா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், போதை பொருள்களுக்கு எதிராக ஆசிரியா்கள், மாணவிகள் உறுதிமொழியேற்றனா்.