செய்திகள் :

`இது ஒரு தனிமனிதனை புகழ்வதுக்கு மட்டுமல்ல, அவர் உழைப்பை.!’ - உதயநிதி பிறந்தநாள் விழாவில் அன்பில்

post image

திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் சின்ன சூரியூரில் தமிழக துணை முதல்வரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "இந்த பிறந்தநாள் என்பது ஒரு தனி மனிதனை பாராட்டி புகழ்வதற்காக மட்டுமல்ல, அவனது உழைப்பை மெச்சிக்கும் விதமாக ஒரு மனிதனை நாம் பாராட்டுகிறோம் என்றால் தனிப்பட்ட மனிதனுக்காக அல்ல. அந்த மனிதன் தான் வாழும் பொழுதெல்லாம் ஏழை எளிய மக்கள் மற்றும் இளைய சமுதாயம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக தான் இந்த பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறோம்.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி - உதயநிதி ஸ்டாலின்

கடந்த 2023-ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் இருந்து மகளிர் உரிமை தொகை தமிழகம் முழுவதும் ஒரு கோடியே பதினைந்து லட்சம் மகளிருக்கு வழங்கப்படுகிறது. இங்கு அந்த உதவி தொகையை பெறுபவர்களும் இருப்பீர்கள். கிடைக்காதவர்களும் இருப்பீர்கள். தமிழக முதல்வர் பேசும் போது கூறியுள்ளார். டிசம்பர் 15-ம் தேதி முதல் கிடைக்கப்பெறாத தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

27 மாதங்கள் இந்த மகளிர் உரிமை தொகையை பெறும் தாய்மார்கள் உள்ளீர்கள். இது, அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தை சேர்ந்த பெண் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்றால், புதுமைப்பெண் திட்டம் ஆயிரம், ஆண் பிள்ளைக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் வழங்கப்படுகிறது. தயவுசெய்து யாரும் பிள்ளைகளை பள்ளி படிப்போடு நிறுத்தி விடாதீர்கள். கல்லூரிக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு நாங்கள் மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறோம் எனத மிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி கூறி, இதுபோன்ற திட்டங்களை கொண்டுவந்துள்ளார். இப்படிப்பட்ட திட்டங்களை பார்த்து பார்த்து நாம் செய்து வருகிறோம். மத்தியில் இருக்கும் பாசிச பா.ஜ.க அரசு என்ன செய்கிறது?. 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.1,290 கோடியை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

இந்தத் திட்டத்தை காங்கிரஸ் கட்சியும், நமது தலைவர் கலைஞரும் சேர்ந்துதான் கொண்டு வந்தனர். இப்படி, நமக்கு வரவேண்டியதை நிறுத்தும் பா.ஜ.க-விற்கு அ.தி.மு.க துணை போகிறது. தமிழக முதல்வர் மத்திய அரசிடம் ஏழை மக்களுக்கு உரிய அந்த பணத்தை உடனடியாக வழங்குங்கள் என கூறுகிறார்.

இது மட்டும் இல்லை, கல்விக்கான நிதியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமார் ரூ. 3,548 கோடி வழங்க வேண்டியதை நிறுத்தி வைத்துள்ளனர். மத்திய அரசு, உங்கள் குழந்தைகள் படித்தால் என்ன, இல்லை படிக்கவில்லை என்றால் என்ன...எங்களுக்கு நீங்கள் ஓட்டு போடவில்லை என செயல்படுகிறது. அதற்கு, தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு எங்களது மாநிலத்தில் 40 லட்சம் குழந்தைகள் கல்வி பயின்று வருகிறார்கள். நீங்கள் வழங்க வேண்டிய ரூ. 3,548 கோடியை நிறுத்தினால அந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கும். மேலும், 32,000 மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் போய்விடும் என எழுதியுள்ளார்.

ஆனால், 'உங்களுக்கு நிதி தர வேண்டும் என்றால் நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்டு கையெழுத்து போடுங்கள். மும்மொழி கொள்கையை ஒப்புக்கொண்டு கையெழுத்து போடுங்கள்' என பிளாக் மெயில் செய்கின்றனர். அதற்கு தமிழக முதல்வர், 'நீங்கள் செய்யும் இந்த பிளாக் மெயிலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம். நீங்கள் ரூ. 3,500 கோடி அல்ல, ரூ. 10,000 கோடி தருவதாக இருந்தாலும் அது எங்களுக்கு தேவையில்லை. எங்களது குழந்தைகளை நாங்கள் படிக்க வைத்துக் கொள்கிறோம் என்று சொல்லும் தமிழக முதல்வரை நாம் பெற்றுள்ளோம். இப்படி, பல்வேறு நிதி நெருக்கடியிலும் திருவெறும்பூர் தொகுதிக்கு ரூ. 56 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்துள்ளார்.

dmk meeting

ஒலிம்பிக் அகாடமி ரூ.150 கோடி மதிப்பீட்டில் இந்த பகுதியில் பணி நடைபெற்று வருகிறது. சூரியூரில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. கலைஞரின் பெயரில் பஞ்சப்பூரில் ரூ.450 கோடி மதிப்பீட்டில் ஒரு பேருந்து நிலையம் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

மணப்பாறையில் 1100 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் பூங்கா அமைக்கப்பட்டு பல நிறுவனங்களை அங்கு தொழில் தொடங்க வைத்துள்ளோம். காமராஜர் பெயரில் ரூ. 290 கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு பல்வேறு நிதி நெருக்கடி வரும் நிலையில் தமிழக முதல்வர் நமது மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து உள்ளார். நான் தற்பொழுது உங்களிடம் கூறியது சிறு உதாரணம் தான். தமிழ்நாடு அளவில் இதுபோன்று எண்ணெற்ற திட்டங்களை செயல்படுத்துகிறார் என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். நாம் உழைத்து மத்திய அரசுக்கு வரியாக கொடுக்கக்கூடிய ஒரு ரூபாய்க்கு அவர்கள் நமக்கு திரும்ப கொடுப்பது 29 காசு தான்.

இதை வைத்து தான் தமிழக முதல்வர் நமக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாம் செலுத்தும் வரி பணத்தை ராஜஸ்தான், உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு வாரி வழங்குகிறார்கள். அதனால்தான், தமிழக முதல்வர் எங்களது வரிப்பணத்தை எங்களுக்கு வழங்குங்கள் என கேட்கிறார். எங்கள் மக்களுக்கு இன்னும் நிறைய செய்வதற்கு காத்துக் கொண்டிருக்கிறோம் என கூறுகிறார். ஆனால், மத்திய அரசு நம்மை திரும்பி கூட பார்க்க மறுக்கிறது. அந்த மத்திய அரசுடன் அ.தி.மு.க கட்சியின் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துக்கொண்டு, அந்த நிதியை தற்பொழுது தர வேண்டாம் அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம்.

dmk meeting

தேர்தல் முடியட்டும் எனக் கூறுகிறார். எப்படி நம்மை வஞ்சிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும். பல திட்டங்கள் வருவதற்கு காரணம் தமிழக முதல்வர். அதனை நமக்கு கேட்டு பெற்று தருபவர் தமிழக துணை முதல்வருக்கு தான் இந்த பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தை நடத்தி வருகிறோம். நமக்கான திட்டங்களை உரிமையுடன் பேசி நமக்கு பெற்று தருகிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த கூட்டத்திற்கு வந்திருக்கும் தாய்மார்கள் எல்லாம் தமிழக முதல்வர் கொண்டு வரும் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்து அவரது கரத்தை வலுப்படுத்தும் விதமாக வரும் 2026-ம் ஆண்டு, 'உழைப்பது நாமாக இருந்தாலும் உதித்தது உதயசூரியனாக இருந்தது' என்ற விதத்தில் தொடர்ந்து உங்களது ஆதரவை நீங்கள் வழங்க வேண்டும்" என்றார்.

ரூ.10200000000 `ஓராண்டு பட்ஜெட்டே போடலாம்; திமுக ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணுவது உறுதி" - எடப்பாடி

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைக் கவனித்து வரும் திமுக மூத்த அமைச்சர் கே.என். நேரு, தனது துறையில் ரூ. 1,020 கோடி வரையில் ஊழல் செய்திருப்பதாகவும், வழக்குப் பதிவு செய்யவும் தமிழக தலைம... மேலும் பார்க்க

"அன்புமணிக்கும், பாமக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதியாகிவிட்டது" - எம்.எல்.ஏ அருள்

சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "ஒரு சில பொறுப்பாளர்கள் கட்சியை திருட பொய... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் வரவிருக்கும் 'டொனால்ட் ட்ரம்ப் சாலை' - ரேவந்த் ரெட்டி முடிவுக்கு பாஜக எதிர்ப்பு!

'தெலங்கானா ரைசிங் குளோபல் உச்சி மாநாட்டிற்கு' (Telangana Rising Global Summit) முன்னதாக, உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் நோக்கில், அந்த மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் உள்ள ஒரு முக்கியச் சாலைக... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை உடைக்க சதி - கொந்தளிக்கும் கு.பாரதி

அம்பத்தூர் மண்டலத்தில் தூய்மைப் பணியாளர்களின் சம்பள விவகாரத்தில் ஊழல் நடப்பதாக பாஜகவின் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம் புகார் கொடுத்திருந்தார்.கராத்தே திய... மேலும் பார்க்க

TVK : கட்டையை போட்ட ரங்கசாமி; சங்கடத்தில் விஜய்! - புதுச்சேரி விசிட் பின்னணி என்ன?

தவெக தலைவர் விஜய் நாளை புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை நடத்தவிருக்கிறார். கட்சி ஆரம்பித்த பிறகு விஜய் முதல் முறையாக புதுச்சேரிக்கு செல்கிறார். ஏற்கனவே டிசம்பர் 5 ஆம் தேதி அங்கே கூட்டம் நடத்துவதாக இருந்... மேலும் பார்க்க

US: ``உங்கள் மனைவி உஷாவை இந்தியாவுக்கு அனுப்புங்கள்'' - ஜேடி வான்ஸ் மீது கடும் விமர்சனம் ஏன்?

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் (JD Vance) “அதிகப்படியான குடியேற்றம் (Mass Migration) என்பது அமெரிக்கக் கனவைத் திருடுவது” என்று தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.`இந்தக் கருத்து முரண... மேலும் பார்க்க