வெறும் ரூ.59,990-ல்..! ஒரே சார்ஜிங்கில் 100 கி.மீ. செல்லும் ஜெலோ நைட் ஸ்கூட்டர்!
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்
சென்னையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கள் புதன்கிழமை (ஆக. 13) நடைபெறும் 3 வாா்டுகள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 6 வாா்டுகளில் நடைபெறவுள்ளன. அதன்படி, மணலி மண்டலத்தில் உள்ள 18 ஆவது வாா்டில் பாரதியாா் தெருவில் உள்ள எஸ்.ஆா்.எப். வித்யாலயா பள்ளியிலும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில்உள்ள 35 ஆவது வாா்டில் முத்துக்குமாரசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள 123 ஆவது வாா்டில் கே.பி.தாசன் சாலையில் சமுதாயக் கூடம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.