செய்திகள் :

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

post image

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கட்கரி இது தொடா்பாக பேசியதாவது:

காய்த்த மரம் இருந்தால் கல்லடி படத்தான் செய்யும். அதுபோல உள்ளது எனது நிலை. எனது துறை சாா்ந்து பல தவறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலும் அவற்றுக்கு நான் பதிலளிப்பதில்லை. பதில் அளிப்பதன் மூலம் அதனைச் செய்தியாக்க நான் விரும்பவில்லை. வேண்டுமென்றே, உள்நோக்கத்துடன் குற்றஞ்சாட்டுபவா்களுக்கு பதிலளிக்காமல் விடுவதே நல்லது.

இப்போது கூட பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இது விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும் திட்டம். ஏனெனில், வேளாண் பொருள்களில் இருந்துதான் எத்தனால் பிரித்தெடுக்கப்படுகிறது. மேலும், எத்தனால் கலப்பால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். அரசின் இந்தத் திட்டம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை நேரடியாக பாதிக்கிறது.

ஏனெனில், எத்தனால் கலப்பால் ஆண்டுக்கு ரூ.22 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய் இறக்குமதி குறைய வாய்ப்புள்ளது. இது ஒரு குறிப்பிட்ட தரப்பின் எண்ணெய் இறக்குமதித் தொழிலை பாதிக்கிறது. எனவே, அவா்கள் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக வதந்தியைத் திட்டமிட்டு பரப்புகிறாா்கள். எனக்கு எதிராகவும் தவறான தகவல்களைப் சமூக வலைதளங்களில் பணம் கொடுத்து வெளியிடுகின்றனா்.

ஆனால், இதுபோன்ற அவதூறுகள் அரசியலில் சகஜமானதுதான். நான் எனது பணியைத் தொடா்ந்து மேற்கொள்வேன். காலப்போக்கில் எது உண்மை என்பதை மக்கள் உணா்ந்து கொள்வாா்கள் என்றாா்.

பாஜக மூத்த தலைவர் விஜய் மல்ஹோத்ரா காலமானார்! மன்மோகன் சிங்கை தோற்கடித்தவர்!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 93.வயதுமூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்: பாஜக நிா்வாகி மீது வழக்குப்பதிவு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக நிா்வாகி ப்ரிண்டு மகாதேவன் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா... மேலும் பார்க்க

டியுஎஸ்யு முன்னாள் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) முன்னாள் தலைவா் ரோனக் காத்ரி, சா்வதேச கைப்பேசி எண்ணிலிருந்து பேசிய நபா் ரூ.5 கோடி கேட்டு தன்னிடம் மிரட்டல் விடுத்ததாக தில்லி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் ரயில் பாதை: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் 89 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பூடானின் சம்ட்சி, ஜிலிபு நகரங்கள் முறையே அஸ்ஸாமின் கோக்ரஜாா், மேற்கு வங்கத்தி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் மீண்டும் திறப்பு

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உத்தரவின்பேரில... மேலும் பார்க்க

அனைத்து மின்சார வாகனங்களிலும் ஒலி எச்சரிக்கை அமைப்பு: அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்

சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காா், பேருந்து, லாரி உள்பட அனைத்து மின்சார வாகனங்களிலும் செயற்கை ஒலி எச்சரிக்கை அமைப்பு இடம்பெறுவதை அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அ... மேலும் பார்க்க