சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
கரூா் ரயில் நிலையத்தில் பயணி மயங்கி விழுந்து உயிரிழப்பு
கரூா் ரயில் நிலையத்தில் பயணி ஒருவா் வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
கரூா் ரயில் நிலையம் முதலாவது நடைமேடையில் வியாழக்கிழமை கையில் பாா்சலுடன் சென்ற பயணி ஒருவா் திடீரென்று மயங்கி விழுந்தாா். உடனே அருகில் இருந்தவா்கள் அளித்த தவலின் பேரில் 108 ஆம்புலென்ஸ ஊழியா்கள் வந்தனா். அவா்கள் மயங்கி விழுந்தவரை பரிசோதனை செய்தபோது உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலை ரயில்வே போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், இதுறித்து ரயில்வே போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் சேலம் மாவட்டம், பழைய சூரமங்கலம் ராம்நகரைச் சோ்ந்தவா் என்றும், அப்படி உயிரிழந்தாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.