செய்திகள் :

"கலவரக் கும்பலை பொடனிலேயே அடிச்சு வெரட்டுவாய்ங்க.!" - மதுரை ஸ்லாங்கில் முதல்வர் ஸ்டாலின்

post image

மதுரையில் நடந்த நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியவர், சமீபத்தில் பரபரப்பு ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்தும் பேசினார்.

முதலீட்டாளர் மாநாட்டில்

மதுரையின் வளர்ச்சியை தடுக்க முடியாது

"உங்களைப் புரிந்துகொண்டவன் நான், என்னைப் புரிந்துகொண்டவர்கள் நீங்கள், நமக்கு இடையில் எந்த சக்தியும் இந்த மண்ணில் புகுந்து பிரிவினையை உண்டாக்க முடியாது, மதுரையின் வளர்ச்சியை தடுக்க முடியாது. மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை அறிக்கிறேன், மதுரை மாநகரில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வைகை ஆற்றின் வடகரையில், விரகனூர் சுற்றுச்சாலை முதல் சக்குடி வரை 8.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு 130 கோடி ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்படும்.

மாநகரின் முக்கிய பகுதிகளில் பழைய பாதாளசாக்கடைக் குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய திட்டம் செயல்படுத்தப்படும். உத்தங்குடி உபரி நீர்க் கால்வாயில் 7 கோடி ரூபாய் செலவில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

முதல்வரை வரவேற்ற கட்சி நிர்வாகிகள்

மேலூர் கேசம்பட்டி கிராமத்தில் பெரிய அருவி நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சார்ந்த கண்மாய்கள் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். மேலும், சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும்.

கொடிமங்கலம், மேலமாத்தூர், புதுக்குளம் மற்றும் விளாச்சேரி கிராமங்களில் இருக்கின்ற பல்வேறு ஏரிகள் மற்றும் கால்வாய்கள் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். சாத்தையாறு அணை முதல் வைகாசிப்பட்டி வரை இருக்கக்கூடிய சாலை, குடுவார்பட்டி முதல் சல்வார்பட்டி வரை இருக்கக்கூடிய சாலை மற்றும் பாலமேடு முதல் வேம்பரலை வரை இருக்கக்கூடிய சாலை ஆகியவை 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் வனத்துறையின் அனுமதி பெற்று மேம்படுத்தப்படும், இவைகளை வெறும் அறிவிப்புகளாக அறிவித்துவிட்டுப் போகிறேன் என்று நினைக்காதீர்கள், இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனைதான்

இப்படி, நம்முடைய சிந்தனை எல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சி; முன்னேற்றம்தான். ஆனால், சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனைதான். தேவையில்லாத பிரச்சினையை கிளப்பி, நம்முடைய வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள், காலம் காலமாக கார்த்திகை தீபத்துக்கு, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தீபம் ஏற்றுவது போல, கடந்த 3-ஆம் தேதி மாலை 6 மணிக்கு பால தீபம் ஏற்றப்பட்டது.

அதேநேரத்தில், உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்திலும் தீபம் ஏற்றி, சாமி புறப்பாடாகி, பதினாறு கால் மண்டபத்திற்கு எதிரே இருக்கும் இடத்தில், சொக்கப்பானை ஏற்றப்பட்டது. இவையெல்லாம், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முறையாக நடைபெற்றது. இவைகள் எல்லாம் உள்ளூர் மக்களுக்கும், உண்மையான பக்தர்களுக்கும் நன்றாக தெரியும். அவர்கள் நல்லபடியாக தரிசனம் செய்துவிட்டுதான் வீட்டிற்குச் சென்றார்கள்.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இப்போது என்ன காரணத்துக்காக பிரச்சினை நடைபெறுகிறது? இந்தப் பிரச்சினையைக் கிளப்புகின்ற கூட்டத்தின் நோக்கம் என்ன? இவையெல்லாமே மக்களுக்கு, நன்றாகவேத் தெரியும். ஆன்மீகம் என்பது, மன அமைதியை, நிம்மதியை தந்து, மக்களை ஒற்றுமையாக இருக்க வைக்க வேண்டும். நான்கு பேருக்கு நன்மை செய்யவேண்டும். இதுதான் உண்மையான ஆன்மீகமாக இருக்க முடியும். ஒரு சிலருடைய அரசியல் லாபங்களுக்காக பிரிவுகளையும், பிளவுகளையும் உண்டாக்கி, சமூகத்தை துண்டாடும் சதிச்செயல்கள் நிச்சயமாக ஆன்மீகம் இல்லை, கேடுகெட்ட மலிவான அரசியல்.

தீபம், எங்கே ஏற்றப்பட வேண்டுமோ, எப்போது ஏற்றப்பட வேண்டுமோ, அங்கே வழக்கம்போல சரியாக, முறையாக ஏற்றப்பட்டிருக்கிறது. நான் இன்னும் பெருமையோடு பக்தப் பெருமக்களுக்கு சொல்கிறேன். தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, எங்கள் ஆட்சியில் 1490 நாளில், 3000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம்.

இப்போது அந்த எண்ணிக்கை இன்னும் கூடியிருக்கும், இப்படிப்பட்ட அரசை, ஆன்மீகத்துக்கு எதிரி என்று சொன்னால், அப்படி சொல்லக் கூடியவர்களுடைய உள்நோக்கம் என்ன என்று, உண்மையான பக்தர்களுக்கு தெளிவாக தெரியும். அறத்தைக் கொண்டாடும் அமைதியான மாநிலமாகதான் தமிழ்நாடு என்றைக்கும் இருக்கும்.

மதுரை மக்களிடம் வளர்ச்சி என்று சொன்னால், வாங்க, வாங்க, என்று வரவேற்பார்கள். அதுவே வன்முறையை தூண்ட கூப்பிட்டால், மதுரை ஸ்லாங்கில் சொல்ல வேண்டுமென்றால், கலவரக் கும்பலை பொடனிலேயே அடிச்சு வெரட்டுவாய்ங்க.

திருப்பரங்குன்றத்தில் பிரச்சனை ஏற்பட்டபோது

அமைதியின் பக்கம் நிற்கின்ற, மதுரை மக்களுக்கு என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய எதிரிகள், டெல்லியில் இருந்து நமக்கு எத்தனை இடைஞ்சல்கள் கொடுத்தாலும், நிதி நெருக்கடிகள் ஏற்படுத்தினாலும், ஆளுநர் மூலமாக, முட்டுக்கட்டைகள் போட்டாலும், எல்லாவற்றையும் மீறி, இந்தியாவிலேயே நம்பர் ஒன்னாக வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்திருக்கிறது.

எங்களுடைய வளர்ச்சிப் பயணத்தை, உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் சதித்திட்டங்கள் எல்லாம் செய்கிறீர்கள். நீங்கள் எப்படி பந்து வீசினாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் அது அடிப்பது சிக்சர்தான். அந்த டீமுக்கு ஏற்றார்போல அடிமைகள் சிக்கலாம். பழைய அடிமைகள், புது அடிமைகளை வைத்து, ‘பி’ டீம், ‘சி’ டீம் உருவாகலாம். ஆனால், கடைசியில் டோர்னமென்ட்டில் சாம்பியன் நாங்கள்தான்.

இங்கே திரண்டிருக்கின்ற மதுரை மக்கள் மீதான நம்பிக்கையில் சொல்கின்றேன். அனைத்து மதத்தினரும், அங்காளி, பங்காளியாக பழகுகின்ற, பாசக்கார மதுரை மண்ணிலிருந்து உறுதியாக சொல்கிறேன், தமிழ்நாட்டில், என்றைக்கும் பெரியார் ஏற்றிய, சமத்துவ தீபம்தான் ஒளிரும். உங்களால் அதை தடுக்க முடியாது, எதிர்த்துக் கேட்க ஆள் இருக்கிறது, உள்ளே பெரியார் ஏற்றிய நெருப்பிருக்கிறது. 2026-லும் அதே ஃபயருடன் திராவிட மாடல் அரசு தொடரும்" என்று பேசினார்

"அன்புமணிக்கும், பாமக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதியாகிவிட்டது" - எம்.எல்.ஏ அருள்

சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "ஒரு சில பொறுப்பாளர்கள் கட்சியை திருட பொய... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் வரவிருக்கும் 'டொனால்ட் ட்ரம்ப் சாலை' - ரேவந்த் ரெட்டி முடிவுக்கு பாஜக எதிர்ப்பு!

'தெலங்கானா ரைசிங் குளோபல் உச்சி மாநாட்டிற்கு' (Telangana Rising Global Summit) முன்னதாக, உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் நோக்கில், அந்த மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் உள்ள ஒரு முக்கியச் சாலைக... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை உடைக்க சதி - கொந்தளிக்கும் கு.பாரதி

அம்பத்தூர் மண்டலத்தில் தூய்மைப் பணியாளர்களின் சம்பள விவகாரத்தில் ஊழல் நடப்பதாக பாஜகவின் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம் புகார் கொடுத்திருந்தார்.கராத்தே திய... மேலும் பார்க்க

TVK : கட்டையை போட்ட ரங்கசாமி; சங்கடத்தில் விஜய்! - புதுச்சேரி விசிட் பின்னணி என்ன?

தவெக தலைவர் விஜய் நாளை புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை நடத்தவிருக்கிறார். கட்சி ஆரம்பித்த பிறகு விஜய் முதல் முறையாக புதுச்சேரிக்கு செல்கிறார். ஏற்கனவே டிசம்பர் 5 ஆம் தேதி அங்கே கூட்டம் நடத்துவதாக இருந்... மேலும் பார்க்க

US: ``உங்கள் மனைவி உஷாவை இந்தியாவுக்கு அனுப்புங்கள்'' - ஜேடி வான்ஸ் மீது கடும் விமர்சனம் ஏன்?

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் (JD Vance) “அதிகப்படியான குடியேற்றம் (Mass Migration) என்பது அமெரிக்கக் கனவைத் திருடுவது” என்று தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.`இந்தக் கருத்து முரண... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை நாமே தகர்க்கிறோமா? - மருவும் மக்களாட்சி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க