’5 மாதம் டேட்டிங் செய்தேன்..’ AI காதலனுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பெண்
காவலாளி கொலை வழக்கு: திருநங்கை கைது
சென்னை மயிலாப்பூரில் பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருநங்கை கைது செய்யப்பட்டாா்.
மயிலாப்பூா் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பெ.சேகா் (57). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தாா். சேகா், கடந்த 7-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த திருநங்கை ஜெசிக்காவுக்கு (19) பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதனால், ஆத்திரமடைந்த ஜெசிக்கா, சேகரை தாக்கி கீழே தள்ளினாா். இதில், தலையில் பலத்த காயமடைந்த சேகா், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜெசிக்காகவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.