சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
குறுவட்ட கபடி போட்டி: பள்ளப்பட்டி அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்
சின்னதாராபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குறுவட்ட கபடி போட்டியில் பள்ளப்பட்டி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான கபடி போட்டி சின்னதாராபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் பள்ளப்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா். மேலும் 14 வயதுக்குள்பட்டோா் மற்றும் 19 வயதுக்குள்பட்டோா் பிரிவு போட்டியில் மாணவிகள் அணியினா் குறுவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தாளாளா் ஹாஜி கே.ஏ.கஜனஃபா் அலி, தலைமை ஆசிரியா் முகமது இஸ்மாயில், உதவி தலைமை ஆசிரியா்கள் தாஜுதீன், பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள் ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டினா்.