செய்திகள் :

'சாண்ட்னர் செய்த அந்த ஒரு தவறு; வெளுத்துக்கட்டிய அபிஷேக்!' - இமாலய இலக்கை எட்டிய இந்தியா!

post image

நியூசிலாந்துக்கு எதிராக ஒரு முக்கியமான போட்டி என்றாலே இந்திய ரசிகர்களுக்கு எப்போதும் பதைபதைப்பாகத்தான் இருக்கும். அகமதாபாத்தில் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியும் அதே பதைபதைப்போடுதான் தொடங்கியது. ஆனால், இந்திய அணி முதலில் பேட் செய்து ஒரு பெரிய டார்கெட்டை நிர்ணயித்து அசத்தியது.

சாண்ட்னர்தான் டாஸை வென்றிருந்தார். காற்றில் ஈரப்பதத்தின் தாக்கத்தை மனதில் வைத்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த ஒரு நல்ல மூவை தவிர ஆட்டத்தின் பெரும்பாலான சமயங்களில் சாண்ட்னர் சொதப்பவே செய்தார். மேட் ஹென்றி முதல் ஓவரை வீசியிருந்தார்.

சாம்சன் ஒரு சிக்சரை அடித்திருந்தாரே ஒழிய அது நல்ல ஓவர்தான். அடுத்த ஓவரில் அபிஷேக்கை மனதில் வைத்து ஆப் ஸ்பின் வீசக்கூடிய க்ளென் பிலிப்ஸை கொண்டு வந்தார். இதுவும் நல்ல ஓவர். மூன்றாவது ஓவரை மீண்டும் ஹென்றிக்கு கொடுப்பார் என நினைக்கையில் டஃபிக்கு ஓவரை கொடுத்தார். அடுத்த ஓவரை பெர்குசனுக்கு கொடுத்தார். இது அபிஷேக்குக்கு ஏதுவாக அமைந்துவிட்டது. சிக்சராக பறக்கவிட்டு வெளுத்துவிட்டார்.

முதல் 4 ஓவர்களுக்கு 4 வெவ்வேறு பௌலர்களை சாண்ட்னர் ஏன் பயன்படுத்தினார் என்றே புரியவில்லை. இந்த உலகக்கோப்பையில் இப்படியொரு பௌலிங் ரொட்டேஷனை சாண்ட்னர் எந்தப் போட்டியிலும் செய்யவில்லை. சாண்ட்னர் செய்த தவறினால் அடுத்த ரவுண்ட் ஸ்பின்னர்கள் வருவதற்குள்ளேயே அபிஷேக் சூறாவளியாக சுழன்றடித்து முடித்துவிட்டார். அரைசதத்தை கடந்து இந்திய அணியின் ரன்ரேட்டையும் 15க்கு மேல் ஏற்றிவிட்டு ரச்சின் ரவீந்திராவின் பந்தில் அ வுட் ஆகினார்.

மிடில் ஓவர்களில் சாம்சனும் இஷான் கிஷனும் கைகோர்த்தனர். வீடியோ கேமில் ஈசி மோடில் ஆடுவதைப் போல நியூசிலாந்து பௌலர்களை வெளுத்தெடுத்தனர். நியூசிலாந்து அணி செய்வதறியாது நின்றது. கடைசி 5 ஓவர்களில்தான் நியூசிலாந்து கொஞ்சம் ஆட்டத்துக்குள் வந்தது. நீஸம் வீசிய 16 வது ஓவரில் சாம்சன், கிஷன், சூர்யா என மூவரும் அவுட் ஆகினர். ஒரு 16 பந்துக்கு இந்திய அணிக்கு பவுண்டரி வராமல் இருந்தது. இந்திய அணி 250 யை தொடுவது சந்தேகமாகப்பட்டது.

கடைசி ஓவரில் கேமியோ நாயகன் துபே இறங்கி வெளுத்துவிட்டார். நீஸம் வீசிய அந்த ஓவரில் மட்டும் 24 ரன்களை துபே சேர்த்திருந்தார். விளைவாக, இந்திய அணி 255 ரன்களை எட்டியது. டி20 உலகக்கோப்பைகளின் இறுதிப்போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

இந்த இலக்கை சேஸ் செய்வது கடினம்தான். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை நாம் மறந்துவிடக்கூடாது.

'தீரா சோகம்...' - மீண்டும் தோல்வி; மீண்டும் கண்ணீர்! - நிறைவேறாத நியூசிலாந்து கனவு!

நியூசிலாந்து அணியின் உலகக்கோப்பை கனவு இந்த முறையும் நிறைவேறவில்லை. பேட் கம்மின்ஸ் ஸ்டைலில் இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவேன் எனக் கூறிய சாண்டனரின் சவால் அகமதாபாத்தில் எடுபடவில்லை. உலகக்கோப்பையை வென்... மேலும் பார்க்க

SKY: 'தோனி... ரோஹித்... சூர்யா!' - தடம்பதித்த கேப்டன்களின் வரிசையில் சூர்யகுமார்

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி மூன்றாவது முறையாக வென்றிருக்கிறது. தோனி, ரோஹித் வரிசையில் டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன்களின் பட்டியலில் சூர்யகுமார் தன்னுடைய பெயரையும் இணைத்திருக்கிறார். சூர்... மேலும் பார்க்க

'லட்சம் கண்களும் கோடி இதயங்களும் கொண்டாட!' - உலகக்கோப்பையை வென்று இந்தியா அசத்தல்!

2023 இல் நடந்த ஓடிஐ உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி இன்னமும் நியாயபகம் இருக்கிறது. அகமதாபாத்தில் திரளும் லட்சம் ரசிகர்களையும் அமைதிப்படுத்துவேன் என சொல்லியடித்திருந்தார் பேட் கம்மின்ஸ். கூடியிருந்த அத்த... மேலும் பார்க்க

'இவன் பெயரே வரலாறு...' - நியூசிலாந்தை கதிகலங்க வைத்த சாம்சன்!

சாம்சன் என்றால் நிலையற்றத்தன்மை, சாம்சன் என்றால் கிடைக்கிற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதவர். இப்படித்தான் இத்தனை நாளும் அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தார். இனிமேல் அப்படி இருக்கப்போவதில்லை... மேலும் பார்க்க

Ind v Eng: 'பும்ராவுக்குதான் எல்லா பாராட்டுகளும் போகணும்!' - ஆட்டநாயகன் சஞ்சு சாம்சன்

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றிருக்கிறது. இந்திய அணி சார்பில் அதிரடியாக ஆடி 89 ரன்கள் அடித்திருந்த சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. Sa... மேலும் பார்க்க

Ind v Eng : 'பயந்துட்டியா.. உயிரே போயிடுச்சு!' - வெளுத்துக்கட்டிய பெத்தேல்; போராடி வென்ற இந்தியா!

வான்கடேவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இமாலய டார்கெட்டை நிர்ணயித்திருந்தது. இங்கிலாந்து வீரர் பெத்தேல் தனது அநாயசமான அதிரடியால் பயம் காட்டினாலும், இ... மேலும் பார்க்க