செய்திகள் :

’சி.வி சண்முகம் உட்பட அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்!' - எஸ்.பி. வேலுமணி விளக்கம்

post image

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "எங்களது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். அ.தி.மு.க என்பது எங்கள் உயிர் மூச்சு, நாங்கள் பதவிக்காக த.வெ.க-விற்கு ஆதரவு தரவில்லை. நானும், சி.வி. சண்முகமும் சில கோரிக்கைகள் வைத்தோம். அந்தக் கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமியும் ஏற்றுக் கொண்டார்.

தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வோம். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

மக்கள் த‌.வெ.க-வை ஆதரித்தார்கள் என்ற அடிப்படையில் சட்டமன்றத்தில் ஆதரவு கொடுத்தோம். த.வெ.க தரப்பிலும் எங்களிடம் பதவி கேட்டு வரவில்லை என அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். தி.மு.க எதிர்ப்பு என்ற அடிப்படையில் ஆதரவு கொடுத்தோம் என சொல்லியிருக்கின்றனர்.

சி.வி சண்முகம் உட்பட அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். இன்று காலை கூட அவரிடம் பேசிவிட்டு வந்தோம். நாங்கள் அண்ணன் தம்பியை போல ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களை வளர்த்த கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதைத்தான் செய்வோம்.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

கருத்து வேறுபாடு இருந்தது. அதை கலைத்துவிட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பொதுச் செயலாளரை பார்த்துவிட்டு வந்து விட்டோம். சி.வி. சண்முகமும், நாங்களும் ஒற்றுமையாக முடிவு எடுத்திருக்கிறோம். அவருடைய கருத்துதான் எங்களுடைய கருத்து. எங்களுடைய கருத்து தான் அவருடையது.

ஊடகங்கள், யூடியூப் போன்றவற்றை ஒரு தவறான எண்ணத்தை கொண்டு வந்து திணித்து மக்களை நம்ப வைக்க பார்க்கிறார்கள். புதிய அரசு இப்பேது தான் வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். குற்றங்கள், போதைப்பொருள் கலாச்சாரத்தை தடுக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்காக இந்த அரசு பணியாற்ற வேண்டும்" என்றார்.

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனியாக ஆலோசனை நடத்தி வருவது குறித்த கேள்விக்கு, "யூகத்துக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம். அ.தி.மு.க மிகப்பெரிய கட்சி, நிறைய தோல்விகளை பார்த்திருக்கிறோம். துவண்டு போகாமல் தோல்விகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றுவோம்" என பதிலளித்தார்.

2025-ல் அமெரிக்காவுக்கு சென்ற வரிப்பணம்; இந்த ஆண்டு வட்டியுடன் திரும்புகிறது - ட்ரம்ப் அரசிற்கு செக்

2025-ம் ஆண்டு முழுவதும், உலக நாடுகளைப் பெரிதும் பாதித்த ஒன்று - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த 'பரஸ்பர வரி'. இந்த வரியைக் கடந்த பிப்ரவரி மாதம், 'சட்டத்திற்குப் புறம்பானது' என்று அமெரிக்க உச்ச நீதிமன... மேலும் பார்க்க

கும்பகோணம்: ஃப்ளக்ஸ் வைப்பதில் வாக்குவாதம் - தவெகவினர் தாக்கியதில் காவலருக்கு கையில் எலும்பு முறிவு!

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண், காளி. இருவரும் தவெக-வில் வார்டு உறுப்பினர்களாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கும்பகோணத்தில் வெற்றி பெற்ற வினோத் அமைச்சராகியிருக்கிறார். இதையடுத்து அமைச்சர் வின... மேலும் பார்க்க

ஹார்முஸ் நீர்சந்தி: ஈரான், ஓமன் கன்ட்ரோலுக்கு செல்லுமா? சுங்க வரி வசூலா? - ட்ரம்ப் பதில்

ஈரானுக்கு வடக்கேயும், ஓமனுக்கு தெற்கேயும் அமைந்திருக்கிறது ஹார்முஸ் நீர்சந்தி. ஆனால், இந்த நீர்சந்தியில் தற்போது ஈரானின் கை ஓங்கியிருப்பதால் தான், ஹார்முஸ் நீர்சந்தியை முழுவதுமாக மூடியிருக்கிறது ஈரான்... மேலும் பார்க்க

'நீ நல்லா சாப்பிட்டிருக்க' - புகார் செய்த பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன்

பக்ரீத் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு வழக்கத்தை விட அதிக கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து வசதிகளை ஆய்வு செய்ய சென்றிருந்த போக்குவரத்துத் த... மேலும் பார்க்க

ரூ.2 கோடி; சாக்கு மூட்டையில் கட்டி மண்ணில் புதைத்து வைத்திருந்த திரிணாமுல் கட்சி நகராட்சி தலைவர்!

மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து மம்தா பானர்ஜி அரசு செயல்படுத்தி வந்த திட்டங்களை புதிய முதல்வர் சுவந்து அதிகாரி ம... மேலும் பார்க்க

'ராஜினாமா செய்கிறேன்' - அறிவித்த சித்தராமையா; இனி கர்நாடகா முதல்வர் 'டி.கே.சிவக்குமார்'!

2023-ம் ஆண்டு கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் போதே, இவருக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி... தற்போதைய கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இரண்டரை ஆண்டு ஆட்சி என்று பேசப்பட்டதாக தகவல்க... மேலும் பார்க்க