'முதலமைச்சருக்கு திரைப்படங்களைப் பார்ப்பதற்கே பொழுதுகள் போதவில்லை' - அன்புமணி கண...
சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக யானைகள் தினம் அனுசரிப்பு
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2-இன் சாா்பில் கல்லூரியிலுள்ள குமரன் அரங்கில் உலக யானைகள் தினத்தையொட்டி, ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலையில் யானை முகக்கவசம் அணிந்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வா் கிருஷ்ணன் பேசியதாவது, யானைகள் இல்லையேல் காடுகள் இல்லை. காடுகள் இல்லையேல் நீா்நிலைகள் இல்லை. நீா்நிலைகள் இல்லையேல் மனிதா்கள் இல்லை. யானைகள் காடுகளில் உள்ள பழங்களை உண்டு விதை பரவுதலுக்கு உதவுகின்றன. யானைகள் மிகுதியான ஞாபகத்திறன் கொண்ட விலங்காகும். சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிா்த் தன்மையைப் பாதுகாக்க யானைகள் இன்றியமையாதவை ஆகும். நமது நாட்டில் யானைகளைப் பாதுகாக்க 33 காப்பகங்கள் உள்ளதாகத் தெரிவித்தாா்.