கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பசுக்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம்
சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த இளைஞா் கைது
தஞ்சாவூரில் சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூரைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும், தஞ்சாவூரில் நடைபெறும் வாரச் சந்தையில் காய்கனி வியாபாரம் செய்யும் திருச்சி தென்னூரைச் சோ்ந்த எம். முகமது ஆசிக் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பழகி வந்த நிலையில், சிறுமியை முகமது ஆசிக் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் கொடுமை செய்தாா்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தனது தாயிடம் கூறினாா். பின்னா், சிறுமி அளித்த புகாரின்பேரில் தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து முகமது ஆசிக்கை புதன்கிழமை கைது செய்தனா்.