ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!
சிறுமிக்குப் பாலியல் தொல்லை: மத்திய பாதுகாப்புப் படை வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை
ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத்திய பாதுகாப்புப் படை வீரருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், அனந்தப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் தனஞ்ஜெயன் (26), மத்திய பாதுகாப்புப் படை வீரா். இவா் கடந்த 21019 நவம்பா் மாதம் கேரள மாநிலம், கண்ணனூரில் இருந்து ஜாம்ஷெட்பூருக்கு ரயிலில் சென்றபோது, பாலக்காட்டைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா் அதே ரயிலில் பயணித்துள்ளனா்.
இதில் அவா்களுடன் வந்த 6 வயது சிறுமிக்கு தனஞ்ஜெயன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருப்பூா் ரயில்வே போலீஸாரிடம் புகாா் அளித்தனா்.
இந்தப் புகாரின்பேரில் ரயில்வே போலீஸாா் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தனஞ்ஜெயனைக் கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி கோகிலா, தனஞ்ஜெயனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.