செய்திகள் :

"தவறான செய்தியைப் பரப்பாதீர்கள்" - பாரதிராஜா உடல்நிலை குறித்து ஆர்.கே.செல்வமணி விளக்கம்

post image

இயக்குநர் பாரதிராஜாவுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

பாரதிராஜா
பாரதிராஜா

அதில், "இயக்குநர் பாரதிராஜா நுரையீரல் தொற்றுக் காரணமாக அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உறுப்பு பாதிப்புகளுக்கான அனைத்து உரிய சிகிச்சைகளும் அவருக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. எங்கள் மருத்துவக் குழு நிபுணர்களால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவை ஆர்.கே.செல்வமணி, அமீர், சீமான், கலைப்புலி தாணு, ஏ.ஆர். முருகதாஸ், சீனு ராமசாமி உள்ளிட்ட சிலர் நேரில் சென்று நலம் விசாரித்திருக்கின்றனர்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.கே.செல்வமணி, "சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதனைத் தெளிவுபடுத்துவதற்காக அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைத்து வந்தோம்.

பாரதிராஜா
பாரதிராஜா

அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் உறுப்புகள் நன்றாக இருக்கின்றன. இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளது. தவறான செய்தியைப் பரப்பாதீர்கள். உண்மையான அக்கறை இருந்தால் அவரின் உடல்நலம் தேற பிரார்த்தனை செய்யுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

CBFC : ஒரு படத்துக்கு தணிக்கை சான்றிதழ் எப்படி வழங்கப்படும்? எப்போது தாமதமாகும்? - முழு விவரம்!

தற்போது, சென்சார் சான்றிதழ் பற்றிய பேச்சுதான் தீயாய் இருந்து வருகிறது.விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' பொங்கல் பண்டிகை ரிலீஸாக திரைக்கு வரும் என அறிவித்திருந்தனர்.ஆனால், இப்போது வரை படத்திற்கு த... மேலும் பார்க்க

"விஜய்யை வைத்துதான் 'உன்னை நினைத்து' படத்தின் பாடலை எடுத்தேன்" - விக்ரமன் பகிர்ந்த வீடியோ

'உன்னை நினைத்து' படத்தில் இடம் பெற்ற 'என்னை தாலாட்டும்' பாடல் இலங்கையில் சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் விக்ரமன் விஜய்யை ... மேலும் பார்க்க

Vijay: 'காதலுக்கு மரியாதை டு ஜனநாயகன்'; விஜய்யின் ரீமேக் படங்கள் & ரீமேக் செய்யப்பட்ட விஜய் படங்கள்

விஜயின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' ஜனவரி 9-ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வ... மேலும் பார்க்க

லொள்ளு சபா வெங்கட் ராஜ் மறைவு: 'டைப் ரைட்டர் மெக்கானிக் டு நடிகர்' - பகிரும் இயக்குநர் ராம்பாலா

நடிகர் லொள்ளு சபா வெங்கட் ராஜ் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. 'வல்லனுக்குப் புல்லும் ஆயுதம்', 'மனிதன்', 'டிக்கிலோ' எனப் பல படங்களிலும் நடித்திருக்கிறார். 'மனிதன்' படத்தில் போலீ... மேலும் பார்க்க