Suriya: `ரசிகர்களிடம் கொடுத்த வாக்கு' 2026-ல் சூர்யாவின் டார்க்கெட் இதுதான்
தவெக: `ஈரோட்டில் விஜய்' - தேதியும், இடமும் தேர்வு; களத்தில் செங்கோட்டையன்! - என்ன சொல்கிறார்?
ஈரோட்டில் த.வெ.க தலைவர் விஜயின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு நேற்று காலை (டிச.7) கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார்.
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரிய இடம் போதுமானதாக இல்லை என காவல்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``த.வெ.க தலைவர், இளைஞரின் எழுச்சி நாயகன், எதிர்கால தமிழகம், மக்கள் எழுச்சியோடு எதிர்கால தமிழகத்தை உருவாக்க இருக்கிற விஜய், ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற 16-ம் தேதி சுற்று பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். வாரிமகாலுக்கு அருகாமையில் இருக்கிற தனியார் இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
மாவட்ட ஆட்சி தலைவரிடத்திலும் காவல்துறை கண்காணிப்பாளரிடத்திலும் கடிதங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்குரிய அனுமதியை பெற்றவுடன், அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்களோ அதை நிறைவு செய்து, வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அந்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சி நடத்த தனியார் இடம்தான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ரோட் ஷோ இப்போது தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஒரு பெரிய மாற்றம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
குழந்தைகள் சாப்பிடுகிற போதும் தாய் தந்தை இடத்திலே என்ன சொல்கிறார் என்பதை நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள்.

காங்கிரஸ் - தா.வெ.க கூட்டணி குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது. அதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். ஒவ்வொரு இயக்கமும் தன்னுடைய கொள்கை ரீதியாக பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு நல்ல இயக்கத்தோடு, அதுவும் புதிதாக உருவான த.வெ.க கட்சி தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பு இருக்கிறது.
என்னை யாரும் கட்டாயப்படுத்தியெல்லாம் இதில் இணைய வைக்கவில்லை. எந்த நிபந்தனையும் நான் வைக்கவில்லை. நிபந்தனை வைத்து ஒரு இயக்கத்திலே யாரும் இணைந்து விட முடியாது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.














