Suriya: `ரசிகர்களிடம் கொடுத்த வாக்கு' 2026-ல் சூர்யாவின் டார்க்கெட் இதுதான்
`நாம் தமிழர் கட்சி தலைவனே தற்குறிங்க; நான் 100% சுயமரியாதைக்காரன்!’ - நாஞ்சில் சம்பத் பேட்டி
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாய் இணைந்து, புதிய ட்ரெண்டிங்காக அரசியல் களத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார் நாஞ்சில் சம்பத். அவரை தொடர்பு கொண்டு, பேட்டி கண்டோம்...
``தவெக-வில் இணைந்து, புதிதாய் பிறந்தது போல் ஒரு உணர்வு அப்படின்னு சொல்லிருக்கீங்க. அதை பத்தி சொல்லுங்க?”
``ஒரு ஆறாண்டு காலத்துக்கு மேலாக எந்த கட்சியிலும் என்னை இணைத்து கொள்ளாமல், திராவிட இயக்க சொற்பொழிவாளர் என்ற அடையாளத்தோடு, ஒரு மனிதனாகவும் ஒரு இயக்கமாகவும் நானே இயங்கினேன். இன்றைக்கு லட்சக்கணக்கான வாலிபர்களின் வசந்த மாளிகை தமிழக வெற்றி கழகத்தில், அதன் தலைவர் தம்பி விஜய்யின் முன்னிலையில் தவெக-வில் இணைத்து கொண்டேன். அந்த நிமிடமே எனக்கு ஒரு பொன்னான பொழுதாக இருந்தது. விஜய் அவர்களுக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க, உங்களுக்கே தெரியும் கோடிக்கணக்கான பேர் இருக்காங்க.”

`“நான் உங்க ஃபேன்” என விஜய் அவர்கள் சொன்னாருன்னு நீங்க சொன்னீங்க. அத பத்தி சொல்லுங்க..?”
``என்னை பார்த்த உடனே வாரி அணைத்து கொண்டார். கட்டிப்பிடித்தார். “நான் உங்க பேன்” உங்களுக்கு தெரியுமா அப்படின்னு கேட்டார். நான் மெய்சிலிர்த்துட்டேன், பூரித்தேன் புலகாங்கிதம்முற்றேன். கடல் கடந்த நாடுகளிலும் சேர்த்து, ஒரு ஐந்து கோடி ரசிகர்களை வைத்திருக்கிற விஜய், நான் உங்கள் ஃபேன் என்று சொன்னது அவருடைய பண்பாட்டை எனக்கு புரிய வைத்தது. இவ்வளவு பெரிய உயரத்தில் இருப்பவர் என்னை ஒரு பொருட்டாக கூட கருத வேண்டியதில்லை. ஆனால் நான் உங்கள் ஃபேன் அப்படின்னு சொல்லி என்னுடைய மேடை தமிழுக்கு அவர் ஒரு அங்கீகாரத்தை தந்திருக்கிறார். ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டம் பெற்றது போல நான் உணர்ந்தேன்.”
``உங்கள் பேச்சுகளில் எதுவும் குறிப்பிட்டு சொன்னாரா?”
``இல்ல. `ஒரு ஒன்பதரை மணி நேரம் பேசினீங்கன்னு சொன்னதே எனக்கு மிரக்களா இருந்துச்சு. என்னை பற்றி நீங்க பதிவிடுவது எல்லாம் நான் பார்த்துட்டேதான் இருக்கேன். உங்க தமிழ், உங்களுடைய குரல் எல்லாரையும் வசீகரிக்கிறது. அதுலையும் என்னுடைய கட்சியில் இருக்கக்கூடிய வாலிபர்களை ரொம்ப ஈர்த்துருக்கீங்க. நீங்க ரொம்ப நல்ல நேரத்தில் வந்திருக்கீங்க. ஒரு போர் களத்துக்கு போகிற நேரத்தில் வந்திருக்கீங்க எனக்கு நல்ல உதவியா இருப்பீங்கன்னு’ சொன்னார்.”
``இன்னென்ன விஷயங்களல்லாம் பேசணும்ன்ற மாதிரி ஏதாவது இன்ஸ்ட்ரக்ஷனல்லாம் கொடுத்துருக்காங்களா?”
``யாரையும் ஒருமையில பேச வேண்டாம். கட்சியினுடைய கொள்கை கோட்பாடுகளை சொல்லுங்க. எல்லோருக்கும் எல்லாம் என்றிருப்பதான் உலகம் நோக்கிய பயணம். ஒரு சமத்துவ உணர்வு. ஒரு சமூக நல்லிணக்கம். ஒரு சமய சகிப்பு தன்மை. பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் இதான் நம்முடைய கொள்கையா வச்சிருக்கோம். இதை கொண்டு போய் பேசினாலே அது உங்க ஸ்டைல்ல பேசினா நல்லா எடுபடும். பேசுங்க கட்சியை கட்டமைக்கறதுக்கு உருதுணையாக இருங்க னு சொன்னார்.

``ஆறு வருடங்கள் வெளில இருந்தீங்க. திராவிட இயக்க பேச்சாளரா மட்டுமே இருக்க போறேன் அப்படின்னீங்க. இலக்கியம் சார்ந்து பயணிக்க போறேன்னீங்க. திடீர்னு இப்ப தவெக பக்கம் இணைஞ்சிருக்கீங்க. என்ன விஷயம் உங்கள தவெக பக்கம் இணையறதுக்கு காரணமா இருந்தது?”
``கரூர் துயரத்திற்கு பிறகு சிபிஐ விசாரணை வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தவெக ஒரு மனு போட்டதற்கு பிறகு, உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட அன்று, ஒரு பத்திரிகைக்கு ஒரு பேட்டி கொடுத்தேன்.
இது தவெக-வுக்கு கிடைத்த வெற்றி. கையறு நிலையில் கை பிசைந்து கைவிடப்பட்ட மனநிலையில் இருக்கிற தவெகவுக்கு அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஒரு புதிய வாசலை திறந்து வைத்திருக்கிறது, அப்படின்னு சொன்னதும் அறிவாலயத்தில என் மேல கோபப்பட்டாங்க.
தவெகன்னு ஒரு அமைப்பு இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறாங்க. பழனிசாமிக்கும், திமுக-வுக்கும் தான் போட்டிங்கிறது மாதிரி காமிக்க முயற்சிக்குறாங்க. தவெக்காவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டின்னு நான் சொன்னேன். அது அவங்களால ஜீரணிக்க முடியல. அதனால எதிர்வினை ஆற்று தொடங்கினாங்க.
நான் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்தாங்க. வள்ளுவர் கோட்டத்தில் `காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ புத்தக வெளியீட்டு விழாவும், ஒரு பத்து அமர்வுகள் கொண்ட இரண்டு நாள் கருத்தரங்கு நடந்தது. அதில் எனக்கு அழைப்பில்லை. ஒரு பொதுக்கூட்டத்திலேயே என்ன நான் பெரிதும் மதிக்கிற பேராசிரியர் சுப.வீ என்னை விமர்சித்து பேசினார்.
கருர் பழனியப்பன் நான் கலந்து கொண்ட கூட்டத்திலே என்ன நக்கல் செய்து நையாண்டி செய்து பேசினார். மரியாதை இல்ல சுத்தமா இல்ல. அது மட்டும் காரணம் அல்ல லட்சக்கணக்கான இளைஞர்கள் கொண்ட ஒரு அமைப்பில இயங்குவது எனக்கு இளமை திரும்பும்.”
``நீங்க திமுக-லதான் தொடர்ந்து பேசிிட்டே இருந்தீங்க, திமுகவுக்கு ஆதரவான கருத்துக்களைதான் சொல்லிட்டு இருந்தீங்க திடீர்னு அங்க இருந்துகிட்டே தவெக-வுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுக்கறதுக்கான காரணம் என்ன?”
``இல்லை. நான் ஒரு விமர்சகன். எனக்கு பல முகம் இருக்கிறது. நான் வந்து ஒரு கடையில் ஆப்பிள் வாங்கினாலும் அந்த ஆப்பிள் அழுகி போயிடுச்சு அப்படின்னு சொல்வதற்கு எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமையை உண்மையை சொல்வதற்கும் எனக்கு உரிமை இருக்கிறது.”
``நீங்க திமுகவுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாடுல இருந்துட்டு திமுக-வுக்கு எதிராக விமர்சிக்கக்கூடிய தவெகவுக்கு ஆதரவான ஒரு கருத்துக்கள் சொல்லும்போது அதை எப்படி அவங்க தாங்கிப்பாங்கன்னு நினைக்கிறீங்க?”
``நான் அவங்ககிட்ட இல்லையே. நான் கட்சி உறுப்பினர் கிடையாது. நான் முதலமைச்சர் முகாமுல இதுவரைக்கும் போனது இல்லையே. நான் கட்சி உறுப்பினர் கிடையாது . நான் எந்த மந்திரிங்க வாசல்லயும் போய் எனக்கு இத செய்ததுதாங்கன்னு கேட்டது இல்லையே.”

``உங்களுக்கு அங்க ஒரு பதவி கிடைக்கும் அப்படின்னு எதிர்பார்த்தீங்களா? அது எதும் கிடைக்காதனால வந்துட்டீங்களா திமுகவில இருந்து?”
``இல்ல இல்ல நான் திமுக-வில என்னுடைய பன்முக தன்மைக்கு ஊனம் ஏற்படும்னு தான் சேர முன்கூட்டியே கணிச்சேன். அதான் இப்ப நடந்துச்சு.”
``தொடர்ச்சியா நீங்க ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவான கருத்துக்கள் தான் சொல்லிட்டு இருந்தீங்க அப்படி இருந்துமே உங்களுக்கான மரியாதை கிடைக்கலையா?”
``அவங்க என்கிட்ட கேட்டிருக்கலாம். ஏன் இப்படி பேசுனன்னாவது கேட்டுருக்கலாம். அதுவும் கேட்கல. அப்போ சத்தம் இல்லாம கடிக்கிறாங்க சாரை பாம்பு மாதிரி. சரி எதிர்வினையாற்றி தீர வேண்டிய கட்டம். இவங்க விரும்பி கூப்பிட்டாங்க இவங்க வெறுத்து ஒதுக்கனாங்க.”
``நீங்க அதிமுக-வில இணையும் போது கூட ஜெயலலிதா அவர்கள் நேரடியா போன் பண்ணி உங்கள கூப்பிட்டாங்கன்னு சொல்லிருந்தீங்க. இந்த இணைப்பு எப்படி நடந்தது எவ்வளவு நாளைக்கு முன்னாடி பேசினாங்க.?”
``வாங்க, தலைவர் உங்களை விரும்புறாரு அப்படின்னு சொன்னாங்க. அந்த முகம் தெரியாத நிறைய தம்பிமார்கள் எங்கள்ட்ட வாங்க எங்கள்ட்ட வாங்கன்னு தொடர்ந்து பேசிட்டே இருந்தாங்க. இப்படி விரும்பி அழைக்கிற கூட்டத்தில் இருப்பதா, வெறுத்து ஒதுக்குற கூட்டத்தில் இருப்பதான்னு யோசிச்சேன். குணம் நாடி குற்றமும் நாடி. குணம் தம்பி விஜயிட்ட இருந்தது குற்றம் அறிவாலயத்தில் இருந்தது. குணம் இருக்கிற இடத்தில சேர்ந்தேன்.”
``கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை நீங்க வந்து தவெக-ல இணைய மாட்டேன் நான் இலக்கிய பணிகளை மேற்கொள்ள போறேன் அப்படி எல்லாம் பேசிட்டு இருந்தீங்க. இப்ப தவெகவுல இணைஞ்சிருக்கீங்க. இத பொதுமக்கள் எப்படி எடுத்துப்பாங்க?”
``கட்சில சேரணும்ங்கற எண்ணமே இல்லை. எனக்கு கட்சியில சேரணும்ங்கிற எண்ணமே எனக்கு கிடையாது. ஏன்னா என்னால அவ்வளவு பெரிய சுமையை சுமக்க முடியாது. இன்னைக்கு அவங்க விரும்பி கூப்பிட்டாங்க அண்ணன் செங்கோட்டையன் நாங்க போய் சேர்ந்தல அவருக்கு நல்ல மரியாதை கொடுத்தாங்க இவங்களும் மரியாதை தர்றது மாதிரி சொன்னாங்க. சரி போகலாமே அப்படின்னு முடிவு பண்ணேன்.”

``நேத்து வரைக்கும் நான் அரசியலுக்கு போகமாட்டேன் நான் இலக்கிய பணிகள் பார்க்க போறேன்னு சொன்னீங்க?”
``இலக்கிய பணி இல்லையே. நாளைக்கே 100 நாள் இலக்கிய கூட்டம் இருக்குன்னு சொல்லுங்க. அது கிடையாது தமிழ்நாட்டில அதெல்லாம் இல்ல. அதெல்லாம் ஒரு உழுத்து போச்சு. திமுக-விலே புத்தக திருவிழா போடுவாங்க எனக்கு வாய்ப்பு தரமாட்டாங்க. நான் முதல்வன் அப்படின்னு சொல்லி கல்லூரியில பேசுறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு. அதுவும் தரமாட்டாங்க. அப்படி வேண்டா விருப்பா இருக்கற இடத்துல எதுக்கு இருக்கணும் விரும்பி கூப்பிடுற இடத்துக்கு போவோம்னு சொன்னேன்.
தவெகவில போனதுக்கு இன்னொரு நோக்கம் இருக்கு. ஒரு லட்சக்கணக்கான இளைஞர்களை ஒரு மோட்டிவேட் பண்ணி அவங்களை இந்த சமூகத்திற்கு பயன்படுகிற மாதிரி மாற்றுவதற்கான ஒரு சூழல்... இன்னும் சொல்லப்போனா ஒரு பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு."
``தவெக-ல இருக்கக்கூடிய இளைஞர்கள தற்குறிகள்ன்னு சொல்லி எல்லாரும் விமர்சிக்கிறாங்க திமுக-ல ஆரம்பிச்சு மற்ற நாம் தமிழர் கட்சி னு எல்லாரும் சொல்றாங்க. அத பத்தி நீங்க என்ன சொல்ல்லுறீங்க?"
``நாம் தமிழர் கட்சி தலைவனே தற்குறிங்க. அவன் எப்படி இந்த தம்பிகளை தற்குறிங்கறது. அந்த வயசுல இருந்தா நானும் ஓடுவேன். நானே ஓடுவேன். கலைஞர் மேடைக்கு வராரு நாகராஜா கோவில் திடல நாகர்கோவில்ல அவரு கார் மேடை நோக்கி வரும்பொழுது காருக்கு முன்னாடி நான் ஓடுனேன், மேடையில ஏறுனேன்.
இது வாலிபர்களுக்கு இருக்கற குணம். அப்படி பண்ணக்கூடாதுன்னு சொல்லணும். அதுக்காக தற்குறின்னு சொல்றதா? அவனுடைய ஆட்கொண்ட தலைவனை பார்கறதுக்கு அவனுக்கு அவ்வளவு ஆர்வம் இருக்கே. அந்த ஆர்வத்துக்கு ஏதாவது அளவுகோல் இருக்கா. இப்படி ஆர்வம் உள்ள இளைஞர்கள் எந்த அமைப்பில இருக்கானா?.
``இந்த ஆர்வம்தான் 41 உயிர்களை கரூர்ல பலி கொண்டு வந்தது இல்லையா?”
``இல்லையே 41 உயிர்கள் பலி கொண்டதுக்கு என்ன காரணம் என்பதை சிபிஐ ரிசல்ட் வரும். அப்போ சொல்லுங்க நீங்க.”
``திருப்பரம்ங்குன்றம் விவகாரத்துக்கு தவெக எந்த விளக்கமும் கொடுக்கல. இன்னொரு பக்கம் கவின் ஆணவ படுகொலைக்கும் எந்தவித விளக்கமும் கொடுக்கல. இதெல்லாம் எந்த தத்துவத்தை அடிப்படையா வச்சு அவங்க விளக்கம் குடுக்காம இருக்காங்க.?”
``இல்ல ஆணவ படுகொலை அவரு கண்டிக்கதான் செய்றாரு.
நேரடியா போய் பார்கல அப்படின்ற ஒரு விமர்சனம் இருக்கு.
அது அவருக்கு வசதி இருக்கா. வசதி இல்லையா போறதுக்கு அது அவர்கிட்டதா கேக்கணும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில தவெக எந்த எதிர்வினை ஆற்றாமல் இருப்பதே நல்லது நேற்றை சொன்னேன். யாரையும் காயப்படுத்த வேண்டாம், யாரையும் நியாயப்படுத்தவும் வேண்டாம். ஏன்னா இது சங்கிகள் திட்டமிட்டு செய்கிற வேலை. இதுல போய் நம்ம விமர்சனம் பண்ணி அதை கெடுக்க சும்மா இருக்கிற புண்ணை குத்தி கெடுக்க வேண்டாம் நினைக்கிறார்.”

``பரந்தூர் விமான நிலையத்தில விஜய் அவருடைய நிலைப்பாடு சரி இல்ல அப்படின்னு சொல்லி பேசிருந்தீங்க இப்பவும் அதே நிலைதான் னு சொல்ரீங்களா?”
``அதே நிலைப்பாடுலதான் இருக்கேன்”
``இது மாதிரி என்னென்ன நிலைப்பாடுகளை விஜய் அவர்கள் மாத்திக்கணும்?”
``கருத்து சொல்ற இடத்தில நான் இல்ல. அவருக்கு ஆலோசனை சொல்லுகிற இடத்தில நான் இல்ல. அவரு தலைவர் எந்த முடிவு எடுக்கிறாரோ அந்த முடிவை நியாயப்படுத்த வேண்டியது என்னுடைய கடமை.”
``எந்த கட்சியில போனாலும் நாஞ்சில் சம்பத் அவர்களால ஒரு சர்வைவ் பண்ண முடியல அவருக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்கல அப்டீன்னு சொல்றாங்க?”
``சர்வைவ்னா என்னங்க... சர்வைவ்ன்னா என்ன சொல்லுங்க... ஒரே கட்சியில நிலைத்திருக்கிறது. ஏன் இருக்கணும்... ஏன் இருக்கணும்.... நான் 100% சுயமரியாதைக்காரன் என்னுடைய சுயமரியாதைக்கு பங்கம் வரும்னா நான் எதிர்வினையாற்றுது என்னுடைய இயல்புங்க.
அங்கீகாரம் கிடைக்க ஏங்கலையே. என்ன யாரும் அங்கீகரிக்க வேண்டிய தேவையும் இல்லையே.”
``தவெக கட்சியில ஒரு ஸ்ட்ரக்சரே இல்ல. அப்படின்னு சொல்லி விமர்சனங்கள் வைக்கிறத பார்க்க முடியுது அத பத்தின உங்க கருத்து என்ன?”
``அவங்ககிட்ட இருக்கற ஸ்ட்ரக்சர் வேற. எந்த கட்சியிலயும் இல்ல. நேத்து போய் பார்த்த பிறகுதான் எனக்கு தெரிஞ்சது . 234 தொகுதிக்கும் எவ்வளவு வாக்காளர்கள், எந்த பூத் என்றெல்லாம் தயார் நிலையில் வச்சுருக்காங்க.”













