செய்திகள் :

பாமக உள்கட்சி அதிகார மோதல் விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தரப்பு புகார்

post image

நமது நிருபர்

பாமக உள்கட்சி அதிகார மோதல் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தரப்பு செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்துள்ளது.

இது தொடர்பாக ராமதாஸ் ஆதரவாளரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ள பி. சுவாமிநாதன், தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் ஷுப்ரா சக்சேனாவை சந்தித்து மனு அளித்தார்.

அதில், பாமக தலைவராக அதன் நிறுவனர் - தலைவரான ராமதாúஸ கடந்த மே 30-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் அதே நாளில் அன்புமணி செயல் தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பின் மூலம் கட்சியின் தலைவராக அன்புமணி செயல்பட முடியாது. இருப்பினும், தலைவர் பதவியில் தொடரும் அன்புமணி, தனது சொந்த ஆதாயம் மற்றும் லாபங்களுக்காக கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் அவர் மீது மத்திய உள்துறையும் மத்திய உளவுத்துறையும் நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 9-ஆம் தேதி அன்புமணி கூட்டியது பொதுக்குழுவே இல்லை என்றும் ஆணைய அதிகாரிகளிடம் முறையிடப்பட்டதாக சுவாமிநாதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் ராமதாஸ் வரும் ஆக.17-ஆம் தேதி கூட்டவுள்ள பொதுக்குழுவில் முறைப்படி அன்புமணிக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி அதன் நகலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்குமாறும், முறைப்படி இரு தரப்பின் கடிதங்கள் வந்த பிறகு உரிய நடவடிக்கைக்கு பரிசீலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் மூடல் ஏன்? தொடக்கக் கல்வித் துறை விளக்கம்

தமிழகத்தில் நிகழாண்டு 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணங்கள் குறித்து தொடக்கக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை இல்லாத 208 அரசுப் பள்ளிக... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிப்பு ரத்து: அமைச்சரின் மேல்முறையீடு நிராகரிப்பு

நமது நிருபர்சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தன்னை சிறப்பு நீதிமன்றம் விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு ம... மேலும் பார்க்க

வங்கக் கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: அடுத்த 2 நாள்களில் மேலும் வலுபெற வாய்ப்பு

வங்கக் கடலில் புதன்கிழமை (ஆக. 13) உருவாகவுள்ள காற்றழுத்தத் தாழ்வு அடுத்த 2 நாள்களில் மேலும் வலுபெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் இந்த வாரம் நடைபெறாது: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசு விடுமுறை என்பதால் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் வரும் சனிக்கிழமை (ஆக.16) நடைபெறாது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். தாயுமானவா் திட்டத்தின் கீழ் சைதாப்பேட்டை மசூத... மேலும் பார்க்க

208 அரசு பள்ளிகள் மூடல்: அன்புமணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் க... மேலும் பார்க்க

இன்று திமுக மாவட்ட செயலா்கள் கூட்டம்

திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் புதன்கிழமை (ஆக.13) நடைபெறவுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப... மேலும் பார்க்க