செய்திகள் :

பெங்களூரு: ``சில்லறை இல்லை...'' - அமைச்சரையே பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துநர்!

post image

பெங்களூரு மாநகரப் பேருந்துகளில் பொதுமக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்னைகளைக் கண்டறிய, கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் சனிக்கிழமை அன்று முகக்கவசம் அணிந்து, சாதாரணப் பயணியைப் போல ரகசிய ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, அவரிடமே நடத்துனர் 'சில்லறை இல்லை' எனக் கூறி பேருந்தை விட்டு இறங்குமாறு கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் பைரதி சுரேஷ் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, 10-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மாறி மாறிப் பயணம் செய்து இந்த அதிரடி சோதனையை நடத்தினார். அப்போது பயணிகள் தினசரி எதிர்கொள்ளும் பல்வேறு குறைபாடுகளை அவர் நேரடியாகக் கண்டறிந்தார்.

அமைச்சர் பைரதி சுரேஷ்
அமைச்சர் பைரதி சுரேஷ்

ஆய்வின் ஒரு பகுதியாக, ஹெப்பல் - நாகஷெட்டிஹள்ளி வழித்தடத்தில் சென்ற பேருந்து ஒன்றில் அமைச்சர் பயணம் செய்தபோது, டிக்கெட் எடுப்பதற்காக நடத்துநரிடம் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்துள்ளார். ஆனால், அதற்கு சில்லறை இல்லை எனக் கூறிய நடத்துநர், அவருக்கு டிக்கெட் வழங்க மறுத்ததோடு, பேருந்தை விட்டு இறங்குமாறு கூறியுள்ளார்.

தான் அமைச்சர் என்பதை வெளிப்படுத்தாமல், பொதுமக்கள் சில்லறை பிரச்னையால் தினமும் படும் அவதியை அமைச்சர் இதன் மூலம் நேரடியாக உணர்ந்தார்.

இதற்கிடையே, 'ஃபன் வேர்ல்டு' பேருந்து நிறுத்தத்தில் பயணி ஒருவர் இறங்குவதற்கு சிக்னல் காட்டியும், பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் இயக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த அமைச்சர், உடனடியாகச் செயல்பட்டு அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சம்பவ இடத்திலேயே உத்தரவிட்டார்.

பேருந்து பயணத்தை முடித்துக் கொண்டு நாகஷெட்டிஹள்ளி பகுதியில் இறங்கிய அமைச்சர், அங்கு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பயணியிடம் கூடுதல் கட்டணம் கேட்டு தகராறு செய்வதைக் கண்டார்.

அமைச்சர் பைரதி சுரேஷ்
அமைச்சர் பைரதி சுரேஷ்

ஆட்டோ மீட்டரில் 30 ரூபாய் எனக் காட்டிய போதிலும், அந்த ஓட்டுநர் 36 ரூபாய் கேட்டு அடம் பிடித்துள்ளார். உடனடியாக இதில் தலையிட்ட அமைச்சர் சுரேஷ், அந்த ஆட்டோ ஓட்டுநரை எச்சரித்தார்.

இந்த ரகசிய ஆய்வு குறித்துப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர், ``இது பொதுமக்களின் உண்மை நிலையை அறிந்துகொள்வதற்கான ஒரு கள ஆய்வு. பெங்களூரு நகரின் பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்தவும், ஊழியர்களிடையே ஒழுங்கு மற்றும் பொறுப்புணர்வை உருவாக்கவும் இதுபோன்ற அதிரடி சோதனைகள் இனி தொடரும்" என்று எச்சரித்துள்ளார்.

விசிக: ``அப்படி கூறுபவர்கள் நம்மை அடிமையாகவே பார்க்கிறார்கள்" - திருமாவளவன் காட்டம்

விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில், திருவண்ணாமலையில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு மண்டலக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், ``தமிழ்நாட்டு அரசியலில் நாம் குறி வைக்கப... மேலும் பார்க்க

"கூட்டணியிலிருந்தும் தவெக அரசைக் கடுமையாக விமர்சிப்பதற்குக் காரணம் இதுதான்" - ஆதவன் தீட்சண்யா

'''தீக்கதிர்' நாளிதழுக்கு அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் சந்தா செலுத்திய செய்தியைக் குறிப்பிட்ட போது, தொண்ணூறுகளில் 'வாச்சாத்தி சம்பவம்' நிகழ்ந்தபோது அவர் குறித்துச் செய்திகள் வெளியான பழைய இதழ்களையும் ... மேலும் பார்க்க

'நான் சிங்கப்பூருக்கு ஓடி, ஒளிந்துவிட்டேனா?' - முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்கு எ.வ.வேலு பதிலடி

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவர் தொடர்பு உடையவர்களின் வீடுகளில் கடந்த ஜூன் 25-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அடுத்த நாளான 26-ம் தேதி எ.வ.வேலு சிங்கப்பூர் சென்றார். இதனிடையே ந... மேலும் பார்க்க

“தவெக-வினர் ஸ்க்ரிப்ட்டுக்கு வாயசைக்கிறார் தோழர் பெ.சண்முகம்” - பரந்தாமன் 'பகீர்' குற்றச்சாட்டு

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தினருக்கு, அரசு வேலைக்கான ஆணையை முதல்வர் விஜய் வழங்கியதைத் தொடர்ந்து, ‘கடைத் தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறார் முதல்வர்’ என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்... மேலும் பார்க்க

``துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் குருகுல கல்வியைச் செயல்படுத்த முடியவில்லை" - ஆளுநர் அர்லேக்கர்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ் கல்லூரியின் (தன்னாட்சி) 59-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாட்டின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதன்மை ... மேலும் பார்க்க

சரத்பவார் கட்சி எம்பி-க்கள் 6 பேர் பாஜக கூட்டணிக்குத் தாவ முயற்சி? காங். தலைவர் கருத்தால் சலசலப்பு

மகாராஷ்டிராவில் ஏற்கனவே சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடைந்து இரு கட்சிகளாகச் செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த 6 எம்.பி.க்... மேலும் பார்க்க