செய்திகள் :

``மது அருந்த தண்ணீர் பாட்டில் தராததால் அடித்துக் கொன்றோம்" - வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் பகீர்!

post image

ஜார்கண்ட் மாநிலம், பலாமு மாவட்டம், போல்பெல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் சிங். இவர், தூத்துக்குடி சில்லாநத்தம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு திரு.வி.க நகரில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைக்குச் சென்றுள்ளார். பிறகு அவர் தங்கியிருந்த வீட்டிற்கு திரும்பவில்லை.

கைது செய்யப்பட்டவர்கள்

இந்த நிலையில் இன்று காலையில் அவர் டாஸ்மாக் கடை அருகிலுள்ள காட்டுப்பகுதியில் தலையில் அடிபட்ட நிலையில் இறந்து கிடப்பதாக தென்பாகம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்குள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜேஷ்குமாரை அடித்துக் கொன்ற சிவா, ஜேம்ஸ், பூமிநாதன் மற்றும் இமாம் கசாலி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், “இரவில் நாங்கள் 4 பேரும் திரு.வி.க நகர் டாஸ்மாக் கடை அருகிலுள்ள காட்டுப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தோம். எங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், அப்போது ஏற்கெனவே தனியாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த ராஜேஷ்குமாரிடம் தண்ணீர் பாட்டில் கேட்டோம். ஆனால் அவர் தண்ணீர் பாட்டில் தர மறுத்ததுடன் இந்தியில் எங்களை திட்டினார்.

தெற்கு காவல் நிலையம்

இதனால் அவருக்கும் எங்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அங்கு கிடந்த மரக்கட்டையால் அவரது தலையில் ஓங்கி அடித்தோம். அவர் உயிரிழந்துவிட்டார். உடனே அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டோம்” என்றனர். இதுகுறித்து போலீஸாரிடம் பேசினோம், “இந்த கொலையில் கைதான சிவா, பூ கட்டும் தொழிலாளி. இவர் மீது இரண்டு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இமாம் கசாலி தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

ஜேம்ஸ், பூமிநாதன் ஆகியோர் சுமை தூக்கும் தொழிலாளி. இவர்கள் 4 பேரும் பூ மார்க்கெட் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் பாரில் மது அருந்தும் போது அடிக்கடி சந்தித்துக் கொண்டதால் நண்பர்களாகியுள்ளனர். அதன் பின்னர் இரவு 10 மணிக்கு மேல் காட்டுப்பகுதியில் அமர்ந்து நள்ளிரவு வரை மது அருந்திவிட்டு வீட்டிற்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்” என்றனர். தூத்துக்குடியில் ஜார்கண்ட், பீகார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலத் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெற்கு காவல் நிலையம்

இவர்கள் பெரும்பாலும் இரவு 10 மணிக்கு மேல் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால், கடைகள் அடைக்கப்பட்ட பிறகும் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை வாங்கிச் சென்று மது அருந்துகின்றனர். அத்துடன், தூத்துக்குடியில் பல டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பிறகு விடிய விடிய சட்டவிரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது. போலீஸார் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தினால் சட்டவிரோத மது விற்பனையையும், அதனால் ஏற்படும் குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.       

நீட் தேர்வுக்குத் தயாராக இருந்த நிலையில், விபரீத முடிவெடுத்த மாணவி - பாலக்கோட்டில் சோகம்!

இன்று நடைபெறும் நீட் தேர்வில் பங்கேற்க இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைதருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகிலுள்ள எண்டப்பட... மேலும் பார்க்க

கூடலூர்: காப்பி தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த ஆண் யானை; தீவிர விசாரணையில் வனத்துறை!

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில், தொடரும் ஆக்கிரமிப்புகளால் யானைகளின் வழித்தடங்கள் துண்டாடப்பட்டு வருகின்றன. தண்ணீர் தேவையை பூர... மேலும் பார்க்க

திருச்சி கலெக்டர் சேரில் அமர்ந்து ரீல்ஸ் வெளியிட்ட வடமாநில இளைஞர் - உலா வரும் பரபர வீடியோ!

திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியரின் அறையில் வடமாநில இளைஞர் ஒருவர் ரீல்ஸ் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா அல... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் பயின்று 440 மதிப்பெண்கள்; நீட் மறுதேர்வு பயத்தில் விபரீத முடிவெடுத்த சேலம் மாணவி

சேலம் மாவட்டம் எருமபாளையத்தைச் சேர்ந்த சேகர் - புவனேஸ்வரி தம்பதியரின் மகள்19 வயது கோபிகா. சேலம் கோட்டை அரசு பள்ளியில் பயின்ற இவர், 12- ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 440 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்... மேலும் பார்க்க

பீகார்: கூட்டுப் பாலியல் கொடுமை; இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் தோட்டா... கும்பல் அட்டூழியம்!

பீகார் மாநிலம், பெகுசராய் என்ற இடத்தில் தனது கணவருடன் வசித்து வசித்து வந்த 26 வயது பெண்ணின் வீட்டிற்குள் 6 பேர் கொண்ட கும்பல் இரவு 11மணிக்கு திடீரென அத்துமீறி நுழைந்தது. அந்த கும்பல் வீட்டில் இருந்த அ... மேலும் பார்க்க

திருச்சி: 'மாணவர்களுக்கு இடைஞ்சல்; பெண்களுக்குப் பயம்' - டாஸ்மாக் பாரை மூட கோரி போராட்டம்

திருச்சி மாநகரம், டி.வி.எஸ் டோல்கேட் அருகே முடுக்குப்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை பார் வசதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறு ஏற்படுவதாகவும் குறிப்பாக போ... மேலும் பார்க்க