செய்திகள் :

`மாதக்கணக்கில் குப்பை அள்ளவில்லை; எல்லாம் ஓரளவுக்குத்தான்!' - போராட்டக் களத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏ

post image

திருப்பூர் மாநகராட்சியில் குப்பை பிரச்னை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. மாநகரையொட்டிய, முதலிபாளையம் கிராமத்தில் கைவிடப்பட்ட கல்குவாரியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. அதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தனர். அதில், முதலிபாளையம் கல்குவாரியில் குப்பைகளைக் கொட்ட திருப்பூர் மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, இடுவாய் ஊராட்சியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் தற்போது குப்பைகள் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. குப்பையை மேலாண்மை செய்வதற்கு போதிய இடவசதி இல்லாததால், மாநகரின் பல இடங்களிலும், சாலைகளின் ஓரத்திலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கும் அவலநிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், திருப்பூர் தெற்குத் தொகுதி திமுக எம்எல்ஏ-வான செல்வராஜ் குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றாததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டம்

இது குறித்து செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "திருப்பூர் மாநகராட்சி 55-ஆவது வார்டு பகுதியில் அமைந்துள்ள முத்தையன் கோயில் நகர் பகுதியில் ஒரு மாதத்துக்கும் மேலாகியும் குப்பைகள் கொட்டப்பட்டு, அள்ளப்படாமல் உள்ளது. பொதுமக்கள் என்னிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு நான் ஆய்வு செய்தபோது அதிகாரிகள் யாரும் வரவில்லை. எப்போது கேட்டாலும், `இன்று குப்பை பிரச்னை சரியாகிவிடும், நாளைக்கு சரியாகிவிடும்' என மாநகராட்சி நிர்வாகம் பொய்யான தகவலை பரப்பி வருகிறது. மாதக்கணக்கில் மாநகராட்சி நிர்வாகத்திடம் நானும் கூறிவந்தேன். ஆனால், நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டுத்தான் இந்த முடிவுக்கு வந்தேன். ஆளுங்கட்சிக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே போராட்டக் களத்துக்கு வந்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினர் என்றால் வீட்டில் படுத்து உறங்க முடியாது. இது மக்களுக்கான பிரச்னை. மக்களுடன்தான் நான் நிற்பேன்" என்றார்.

எம்.எல்.ஏ செல்வராஜின் போராட்டத்தை அடுத்து, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அங்கிருந்த குப்பைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவரே மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டது, திருப்பூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல்: 'ரூ.1,595 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்' - தொடங்கி வைத்த முதல்வர் | Photo Album

திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின்திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின்திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின்திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின்திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின்திண்டுக்கலில் முதல்வர் ஸ்டாலின்திண்டுக்கலில் ... மேலும் பார்க்க

`இது பாதிக்கிணறு தாண்டிய கதை மாதிரிதான்!' - உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டமும் பின்னணியும்!

23 ஆண்டுகாலப் போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் என வந்தவர்கள் எல்லாம் கொடுத்த வாக்குறுதிதான். ஆனால் ஆட்சிக்கட்டிலில் ஏறியவுடன் அமைதியாகி விடுவார்கள். இப்போது காலம் கனிந்த... மேலும் பார்க்க

தேனி: எம்பி தங்க தமிழ்ச்செல்வனின் காரை மறித்து பொதுமக்கள் வாக்குவாதம், தள்ளுமுள்ளு; காரணம் என்ன?

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சியில் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ரூ. 2.82 கோடியில் பக்தர்கள் இளைப்பாறு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைப... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டம் போன்றதா ’உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டம்?' என்ன சொல்கிறார்கள் அரசு ஊழியர்கள்?

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டதை அறிவித்திருக்கிறது மாநில அரசு.அதாவது சுமார் இருபது ஆண்டுகளாக அவர்கள் கேட்டு வந்த பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதில் TAPS எனப்படும் (Tamilnadu Assur... மேலும் பார்க்க

வங்கதேசத்தவரைக் கண்டுபிடிக்க மொபைல் போனில் ஸ்கேன்? - சர்ச்சையாகும் உத்தரப்பிரதேச போலீஸாரின் வீடியோ

இந்தியாவில் பங்களாதேஷ் பிரஜைகளைக் கண்டுபிடித்து கைது செய்து நாடுகடத்தி வருகின்றனர்.உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் போலீஸார் பொதுமக்கள் பங்களாதேஷ் பிரஜைகள் இருக்கின்றனரா என்பதைக் கண்டுபிடிக்க மொபை... மேலும் பார்க்க

மத்தியபிரதேசம்: "5 மாதக் குழந்தையை கடவுள் எடுத்துக்கிட்டார்"- குடிநீரில் கலந்த கழிவுநீர்; 9 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சாக்கடை நீர் கலந்த குடிநீரைக் குடித்து 7 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளன... மேலும் பார்க்க