செய்திகள் :

'அக்கவுன்ட்டில இருந்து 25,000 ரூபாயை எடுத்துகிட்டாங்க, அந்த சமயத்துல என் மனைவி.!'- பிளாக் பாண்டி

post image

'பேய் இருக்க பயமேன்' படத்தை இயக்கிய சீ.கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் டார்க் காமெடி படமாக வெளியாக இருக்கும் திரைப்படம் 'நிர்வாகம் பொறுப்பல்ல'.

இந்தப் படத்தில் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (நவ,20)நடைபெற்றது.

'நிர்வாகம் பொறுப்பல்ல'
'நிர்வாகம் பொறுப்பல்ல'

இதில் கலந்துகொண்டு பேசிய பிளாக் பாண்டி, " என்னுடைய மனைவியும், நானும் இரண்டாவது குழந்தை பிறக்கும் சமயத்தில் மருத்துவமனை சென்றிருந்தோம்.

மருத்துவமனையில் பணம் கட்டுவதற்காக 27,000 வைத்திருந்தேன். நான் போனில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது எனது மனைவி பேங்கில் இருந்து ஒரு மெசேஜ் வருகிறது என்கிறார்.

ஆதார் கார்ட் வெரிஃபிக்கேஷன் கேட்கிறது என்றார். நான் வெயிட் பண்ணு என்று சொன்னேன். ஆனால் அந்த இடைவெளியில் எனது மனைவி அந்த ஃபைலை ஒப்பன் செய்துவிட்டார்.

அந்த ஃபைலை ஓப்பன் செய்த அடுத்த நொடியில் என்னுடைய பேங்க் அக்கவுன்ட்டில் இருந்து 25,000 ரூபாயை எடுத்துக்கொண்டார்கள். அதனால் எனக்கும், மனைவிக்கும் சண்டை வந்து மன உளைச்சல் ஆகிவிட்டது.

பணம் போய்விட்டதே என்று என் மனைவி கதறி அழுதார். பணம் காணாமல் போனதை நினைத்து கவலைப்படுவதா? இல்லை மனைவிக்கு ஆறுதல் சொல்லுவதா? என்றே தெரியவில்லை.

பிளாக் பாண்டி
பிளாக் பாண்டி

போலீஸில் புகார் கொடுத்தோம். ஆனால் அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களை மாதிரி பாமர மக்களுக்கு அந்த பணம் கிடைக்கவில்லை என்றால் எவ்வளவு கஷ்டம் என்பது எங்களுக்குத் தான் தெரியும்.

வாட்ஸ் அப்பில் 'APK FILE' என ஒன்று வருகிறது. அப்படி வந்தால் அதனை க்ளிக் செய்யாதீர்கள். பணம், புகைப்படங்களைப் பொறுத்தவரை எல்லாரும் கொஞ்சம் கவனமாக இருப்போம். இந்தப் படத்தில் ஏமாற்றும் கும்பல் பற்றி கார்த்தீஸ்வரன் சொல்லியிருக்கிறார்" என்று பேசியிருக்கிறார்.

Mask: "காலேஜ் வேலைகளை முடிச்சிட்டு படம் பார்க்க வாங்க!" - கல்விக்கு முக்கியத்துவம் அளித்த கவின்

கவின், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருக்கும் 'மாஸ்க்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். Mask Movieதி... மேலும் பார்க்க

"கோவா 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்'"- இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி

கமல்ஹாசன் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் `அமரன்'. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இதில் சிவகார்த்திகேயன்நடித்திருந்தார். தேசத்திற்காக உயிர... மேலும் பார்க்க

"அடுத்து முப்படைகள் பத்தி படம் எடுக்கணும் ஆசை" - சர்வதேச திரைப்பட விழாவில் அமரன்; நெகிழும் கமல்

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. மக்களி... மேலும் பார்க்க

தவெக: "விஜய் கவனமாக இருக்கணும்; அவரைச் சுத்தி நிறைய சகுனிகள் இருக்காங்க" - பி.டி.செல்வகுமார்

தவெக தலைவர் விஜய்யைச் சுற்றிலும் சூழ்ச்சி வலை இருப்பதாக அவருக்கு 27 ஆண்டுகளாக மேனேஜராகப் பணியாற்றி வந்த பி.டி.செல்வகுமார் தெரிவித்திருக்கிறார்.நடிகர் விவேக் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (நவ.19) 'கலப்... மேலும் பார்க்க

Sai Pallavi: 'Happie Happie' - நடிகை சாய் பல்லவி லேட்டஸ் க்ளீக்ஸ் | Photo Album

Ramya pandian: நடிகை ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Photo Album மேலும் பார்க்க