"பேசில் ஜோசப்பிற்காக எதையும் செய்ய தயங்க மாட்டேன்" - டொவினோ தாமஸ் நெகிழ்ச்சி
'அடிச்ச அடி அப்படி.!' - வான்கடேவிலேயே மும்பையை சம்பவம் செய்த ஆர்.சி.பி!
வான்கடேவில் வைத்தே மும்பை அணி மீது அதிரடி தாக்குதலை நடத்தி வென்றிருக்கிறது பெங்களூரு அணி.

``எல்லாப் போட்டியும் போட்டியல்ல ஐபிஎல் ரசிகர்களுக்கு ரோ-கோ மோதிக் கொள்ளும் போட்டியே போட்டி"னு புது திருக்குறள் எழுதுற அளவு முக்கியத்துவம் வாய்ந்தது ஆர்சிபி - மும்பை மோதல்.
அதுலயும் ராஜஸ்தான் ராயல்ஸ்கிட்ட, குறிப்பா சூர்யவன்சிகிட்ட வாங்குன உதைய கெட்ட கனவா நினைச்சு மறக்க ரெண்டு அணிக்குமே ஒரு வெற்றி தேவை. ஆனாலும் கடைசியா இந்த ரெண்டு அணிகளும் மோதிக்கிட்ட ஏழு போட்டிகள்ல ஆறில் ஆர்சிபி தோத்துருக்குன்ற ஸ்டேட்ஸ் அவங்க ஆர்மிய லைட்டா வலின்ற டிபார்ட்மெண்ட்குள்ள எடுத்துட்டு போய்ருந்துச்சு. ஆனா அது எல்லாமே போட்டியோட முதல் ஓவர் முடியற வரைதான்.
"பழைய கணக்குலாம் இனிமே செல்லாது"ன்னு அதுக்கடுத்து வந்த முதல் பாதி முழுவதுமே ஆர்சிபி ராஜ்ஜியம்தான், பவுண்டரிகளால் பலிதீர்த்தது மும்பையை.....
"மயக்கமா, கலக்கமா"னு பாடாத குறைதான் மும்பை கூடார பௌலிங் யூனிட்டுக்கு. இது வான்கடே மைதானமா இல்லேன்னா ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் மும்பை பௌலர்கள வச்சு இலவச நெட் ப்ராக்டீஸ் பண்றாங்களா, அதைத்தான் லைவ்ல பார்க்கறோமோன்னு ரசிகர்களுக்கு சந்தேகம் வந்ததா கேள்வி. போல்ட் பால்ல சிக்ஸர் அடிச்சு கோலி சிறப்பா தொடங்கி வைக்க, தொடர்ந்தது எல்லாம் சம்பவம்தான். பும்ரா ரெண்டு ஓவர்கள் நடுவுல வீசியுமே பவர்பிளேல 71/0-ன்ற நிலைமைனா பாருங்க, எப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல் பௌலர்கள் மேல நடந்துருக்குன்னு. ஒருபக்கம் பும்ரா போடுற ஸ்லோ பவுன்சரா அலேக்கா அப்பர் கட் அடிக்குறாரு கோலி, இன்னொரு பக்கம் சாண்ட்னர் ஓவர்ல ஷால்ட் ஹாட்ரிக் சிக்ஸரையும் இலவச இணைப்பா ஒரு பவுண்டரியையும் அடிச்சு மும்பை கதைய முடிச்சுவிடுறாரு.

பவர்பிளேலயே வருத்தத்தோட சுணங்கிப் போன மும்பை பௌலர்ஸ `உப்பு'க் கண்டம் போட்டு உட்கார வச்சுட்டாரு சால்ட். நங்கூரமா பேட்ட மாத்தி கோலி சப்போர்டிங் ஆர்டிஸ்டா மாற எந்த ஓவர்லயும் பவுண்டரி இல்லாம இருக்காதுன்றத சால்டோட பேட் உறுதிப்படுத்திட்டே இருந்தது. 11-வது ஓவர்ல சால்ட் கிளம்பறப்போவே 120 ரன்கள ஓப்பனிங் பார்டனர்ஷிப் சேர்த்துடுச்சுன்றது மும்பைக்கான முதல் அடி.
அடுத்ததா பட்டிதர் மும்பைய சர்வநாசம் பண்ணாரு 17 பந்துகள்ல அரைசதம் அடிச்சு. முந்தின கூட்டணி 200ன்ற ஸ்ட்ரைக்ரேட்ல ஆடுச்சுன்னா இந்த இணை ஏறக்குறைய 300 ஸ்ட்ரைக்ரேட்ல 23 பந்துகள்ல 65 ரன்கள குவிச்சுடுச்சு. இருந்தாலும் எண்ணெய் விடாத மிதிவண்டி மாதிரி கோலியோட இன்னிங்க்ஸ் மிடில் ஓவர்கள்ல ஸ்லோ ஆகி அவங்களுக்கான ஸ்பீடு பிரேக்கரா மாறிடுச்சு.
கடைசி ஆறு ஓவர்கள்ல மூணு விக்கெட் எடுத்து வெறும் 53 ரன்கள் மட்டுமே கொடுத்து பிரேக் பிடிக்காத மாதிரி ஓடிட்ருந்த ஆர்சிபி இன்னிங்க்ஸ கொஞ்சமா மும்பை இறுக்கிப் பிடிச்சிருந்துச்சு. அந்த விக்கெட்டுகள் மட்டும் விழாம இருந்திருந்தா அல்லது கோலி கொஞ்சம் ஆக்ஸிலரேட் பண்ணியிருந்தா ரன்கள் 270-ஐ தொட்டிருக்கும். இந்த போட்டிலயும் பும்ரா விக்கெட் எடுக்கல, இன்னமும் அவரோட கணக்க இந்த ஐபிஎல்ல தொடங்கலேன்றதால ஏற்கனவே கேலிக் கணைகள் அவர்மேல பாயத் தொடங்கிருக்கு. மறக்கக்கூடாத ஒரு விஷயம், ப்ளாட் டிராக்ல எல்லா பௌலர்களும் கில்லட்டின்ல தலையைக் கொடுத்த மாதிரி 10-ஐ தாண்டி எக்கானமி எகிற பலிகொடுக்கப்படற ஒரு கட்டத்துலயும் வெறும் 8.8-ன்ற அவரோட எக்கானமிதான். ஆனைக்கு அடி சறுக்கலாம், ஆனால் பும்ராவுக்கு சறுக்காது.....

சவாலான டார்கெட்டை எட்ட சாத்தியமேயில்லா ஓர் ஆட்டத்த ஆடனும், ஹெவிவெய்ட் பேட்ஸ்மேன்களோட புகலிடமான மும்பை இதனைச் செய்ய வாய்ப்பிருக்குன்ற நம்பிக்கையோடதான் இரண்டாவது பாதி தொடங்குச்சு. பவர்பிளேல விக்கெட் விழாம பார்த்துக்கிட்டது, ஓவருக்கொரு முறை பந்து பவுண்டரிக்குள் பாய்வத உறுதி செய்ததுனு ஆறு ஓவர்களுக்குள்ல முடிக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள சரியாவே செஞ்சாங்க, ரன்களும் 62-ஐ எட்டியிருந்துச்சு. ஆனாலும் இவ்வளவு பெரிய டார்கெட்டுக்கு இது ஸ்லோ ஸ்டார்ட்தான்றதுதான் யதார்த்தம். ரிட்டயர்ட் ஹர்ட் ஆன ரோஹித்தும் அதே தப்பைத்தான் செஞ்சுருந்தாரு. ரியானுடைய பேட்டுக்கும் 4-வது ஓவருக்கு அப்புறம் ஆர்சிபி பௌலர்கள் கடிவாளம் போட்டுட்டாங்கன்றதுதான் மும்பைக்கான மூடுவிழா.
கேம் சேஞ்சரா ஆர்சிபிக்கு மாறிட்ட சுயாஸ் ஷர்மாவை முன்னெச்சரிக்கை முத்தண்ணாவா கூட்டிட்டு வந்து ஒரே ஓவர்ல ஆர்சிபி எடுத்த அந்த இரு விக்கெட்டுகளும் ஆட்டத்தோட முக்கியத் திருப்புமுனை. இருந்தாலும், என்னதான் விக்கெட்டுகள் விழுந்தாலும் ரன்ரேட்டை 10-க்கு கீழே இறங்காம மும்பை பார்த்துக்கிடுச்சு. பிரச்சனை என்னன்னா வெறும் 200 இலக்குனா இந்த வேகம் போதும், ஆனா 241-ஐ எட்டனும்ன்றபோ, ஆரம்பத்துலயே தேவைப்படற ரன்ரேட் 12-ன்றப்போ இந்த வேகம் போதல. ரிலேல இறுதி ரவுண்ட் மாதிரி இறுதி 10 ஓவர்கள்ல ரன்ரேட்டை இரட்டிப்பாக்கி இருக்கனும். அத மும்பை செய்யத் தவற பட்ஜெட்ல மாசமாசம் வரவுக்கும் செலவுக்குமான இடைவெளி அதிகரிக்கற மாதிரி ஓவருக்கு ஓவர் பந்துக்கும் தேவைப்படற ரன்களுக்குமான இடைவெளி எகிற ஆரம்பிச்சது.

குங்ஃபூ பாண்டியா அதைச் செய்ய முயற்சி பண்ணி எல்லா பாலுக்கும் பேட்ட சுத்துனதாலதான் ஸ்லோ பால் அவரைக் காவு வாங்குச்சு. ஆனா மிஸ்டர் 360° நேரெதிரா "கேப்டன் நீதான் உனக்குத்தான் பிரச்சனை, எனக்கு என்ன வந்துச்சு?!"ன்னு வேட்டைக்காரன் மோட்ல பேட்டை சுத்தாம சர்வைவர் மோடுக்குள்ல சுருண்டதுதான் சோதனை. கடைசில ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாலயே திருட்டுத்தனமா வெளியான திரைப்படம் மாதிரி ரூதர்ஃபோர்டோட போராட்டம் வீணானதுதான் வேதனை. இறுதி ஓவர்ல அவர் ஆடுனதுலாம் ருத்ர தாண்டவம். கடைசில அவர் காட்டுன இண்டென்ட கொஞ்சமாவது சூர்யக்குமார் சீனியர் பிளேயரா முன்னாடி காட்டியிருக்கலாம்.
80 + 80 + 80னு மூன்று பகுதியா அடிக்க வேண்டிய ரன்களப் பிரிச்சு பவர்பிளே, இறுதி ஆறு ஓவர்கள்ல தலா 80 ரன்களைக் கடந்திருந்தா மத்திய ஓவர்கள்ல ரன்கள்வரத்து குறைஞ்சிருந்தாலும் சமாளிச்சிருக்கலாம், கோலிக்கு டெடிகேட் பண்ற மாதிரி வெறும் `18' ரன்கள வித்தியாசத்திலான தோல்வியும் அதைத்தான் உறுதிப்படுத்தியது. பவர்பிளேல ஏற்பட்ட அந்த பற்றாக்குறைதான் அடுத்தடுத்த ஓவர்கள்ல அழுத்தத்த ஏத்தி தோல்விக்குக் காரணமானது.
மொத்தத்தில் Red Soil இருந்ததோ இல்லையோ இருபக்க பௌலர்களை ரத்தம் சிந்த வச்சதா வான்கடே மாற, மும்பைக்கு ஹாட்ரிக் தோல்வியைக் கொடுத்து ரசிகர்களுக்கு ஹார்ட் பிரேக் கொடுத்ததா இந்தப் போட்டி மாறியிருக்கு.!


















