செய்திகள் :

அண்ணாமலை: புறக்கணிக்கும் தமிழக பாஜக; கைவிட்ட டெல்லி? - தேர்தல் பொறுப்பிலிருந்து விலகியது ஏன்?

post image

`தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்' என பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருப்பது தமிழக அரசியல் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. 'தந்தைக்கு உடல்நிலை சரியில்லை' என அவர் சொன்னாலும் இந்த அறிவிப்புக்கு பின்னே சில அரசியல் மூவ் இருப்பதாக சொல்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்!

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க, பா.ம.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளை இணைத்து மெகா கூட்டணியை கட்டியிருக்கிறது பா.ஜ.க. கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை வகித்தாலும், 234 தொகுதிகளுக்கும் 72 தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தார் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

அவர் வெளிட்ட பட்டியலில் அண்ணாமலைக்கு சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளை கண்காணிக்கும் பொறுப்பு ஒதுக்கப்பட்டிருந்தது.

நயினார் நாகேந்திரன், அண்ணாமலை

இதுகுறித்து நம்மிடம் பேசிய அண்ணாமலை ஆதரவாளர்கள் சிலர், "தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்கள் சில கண்டிஷன்களை விதித்திருக்கிறது டெல்லி. அதன்படி ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு தொகுதிகளுக்கு இருமுறை பயணித்து, இரு தினங்கள் தங்கி தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொகுதியிலுள்ள செல்வாக்கான பிரமுகர்களையும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த வேண்டும். இப்பணிகளுக்கு எப்படியும் 15 முதல் 20 நாட்கள் அண்ணாமலை பயணப்பட வேண்டியிருக்கும். அவரது தந்தையின் உடல்நிலை சீராக இல்லாத சூழலில் 15 நாட்கள் பயணிப்பதற்கு அவர் தயாராக இல்லை. கல்லூரி காலத்தில் தொடங்கி ஐ.பி.எஸ் பணியில் இருந்தவரை அவரது குடும்பத்தினருடன் அதிக நாட்கள் செலவழித்ததில்லை. எனவே உடல்நிலை சீரடையும்வரை தந்தையுடன் இருக்க விரும்புகிறார்" என்றனர்.

நயினார், எடப்பாடி பழனிசாமி
நயினார், எடப்பாடி பழனிசாமி

"தந்தையின் உடல்நிலையை காரணியாக வைத்து தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை தட்டிக் கழிக்கிறார்கள் அண்ணாமலை" என்கிறார்கள் பா.ஜ.க சீனியர்கள் சிலர்.

நம்மிடம் பேசியவர்கள் " 'மொத்த தமிழ்நாட்டையுமே கண்காணிக்கும் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்த எனக்கு 6 தொகுதி பொறுப்பாளராக நியமிப்பதா?' என்ற அதிருப்தியில்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார். மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து தூக்கியபோது அவருக்கு தேசிய பொறுப்புகள் வழங்கப்படவுள்ளது என தகவல்கள் சிறகடித்தன. ஆனால் அப்படி எந்த நகர்வையும் டெல்லி மேற்கொள்ளவில்லை. அது அண்ணாமலைக்கு ஏமாற்றத்தை அளித்தது.

மேலும் அவருக்கு ஒத்துவராத அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தது மட்டுமில்லாமல், 30-க்கும் குறைவான எண்ணிக்கைகளில் பா.ஜ.க போட்டியிடப் போவதையும் அவர் விரும்பவில்லை. மேலும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் அவரை இடம்பெறச் செய்யவில்லை, மதுராந்தகத்தில் பிரதமரை வரவேற்கும் குழுவிலும் அவர் பெயரைச் சேர்க்கவில்லை.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

இப்படி பல்வேறு சம்பவங்களால் அதிருப்தியடையந்த அவர், தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன் என அறிவித்திருக்கிறார்.

'எனக்கு பொறுப்பு இல்லை', 'எனக்கு கூட்டணி பிடிக்கவில்லை, அதனால் வேலை செய்ய மாட்டேன்' என பா.ஜ.க-வில் ஒருவர் செயல்படுவதும் டெல்லி அதனை வேடிக்கைப் பார்ப்பதும் வியப்பாகவே இருக்கிறது" என்றனர்.

அண்ணாமலையை சரிகட்டுவதும், ஓரம்கட்டுவதும் டெல்லி கைகளில்தான்!

வருமான வரித் தாக்கலில் இனி உங்களுக்கு Form 16 'இல்லை' சம்பளதாரர்களே! மாற்று என்ன?

வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து புதிய வருமான வரிச் சட்டம் அமலாக உள்ளது. இதனால், வருமான வரிப் படிவத்தில் இருந்து வருமான வரிக் கணக்குத் தாக்கல் வரை... இனி பல புதுப்புது மாற்றங்களைச் சந்திக்க உள்ளோம்... மேலும் பார்க்க

டிமாண்டி சாலை இனி எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை! - இசை மேதைகளின் பெயரில் சென்னை சாலைகள்!

தமிழகத்தின் திரை மற்றும் இசைத் துறைக்கு ஈடு இணையற்ற பங்காற்றிய பழம்பெரும் கலைஞர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் ஆகியோரைக் கௌரவிக்கும் வகையில், அவர்கள் வாழ்ந்த மற்றும்... மேலும் பார்க்க

மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: `மதமாற்றம் காரணமல்ல' - விரிவான அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா என்ற மாணவி, கடந்த 2022-ம் ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.சித்தி கொடுமை, பள்ளியில் கொடுத்த கூடுதல் பணி ... மேலும் பார்க்க

`இரவினில் ஆட்டம்; பகலில் தூக்கம்; இதுதான் துணை முதல்வர் உலகம்" - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில், எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகையில், "முதல்வர் ஸ்டாலின் அதிமுக, பாஜக-வுக்கு ... மேலும் பார்க்க

``இமய மலையாய் நிமிர வேண்டியவன், அதிமுக-வால் பாதாளத்துக்குச் சென்றேன்" - மனம் வெதும்பி பேசிய வைகோ

ஈரோட்டில் மதிமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர், "கடந்த காலத்தில் நான் சில பிழைகளைச் செய... மேலும் பார்க்க

பாஜக-வை எதிர்க்காத விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா? - குழப்பத்தில் கதர்கள்!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் விலகிச் சென்ற அ.தி.மு.க-வை, என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவந்த டெல்லி பா.ஜ.க., 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வீழ்த்த பல்வேறு அஸ்திரங்களை கையிலெடுத்திருக்... மேலும் பார்க்க