செய்திகள் :

'அதிமுக சின்னத்தில் வென்ற எம்.எல்.ஏக்களை திருடும் விஜய்தான் களவாணி!' - எடப்பாடி கடும் தாக்கு

post image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை.14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

முதல்வர் விஜய்யை விமர்சித்து பேசியிருக்கும் அவர், "அண்மையில் கரூர் சென்றிருந்த முதல்வர் விஜய் திமுக - அதிமுக கூட்டுக்களவாணி என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

இது எவ்வளவு பெரிய வார்த்தை. முதல்வர் விஜய் தான் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்ப பேச வேண்டும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை திருடும் விஜய் தான் களவாணி. முதல்வர் விஜய் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை. வெறும் பஞ்ச் டயலாக் பேசி வருகிறார்.

4 கால்கள் இருந்தால் தான் நாற்காலி நிற்கும். விஜய்யின் நாற்காலியில் ஒரு கால் இரவல் கால்.

ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பதவி கொடுத்து புதுமை படைத்திருக்கிறார். இன்னும் கொஞ்சநாளில் அவரது மேக்கப் மேனுக்கும் அரசு பதவி கொடுத்து விடுவார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

திமுக - அதிமுக கூட்டணி என்பதே கட்டுக்கதை. திமுக தீயசக்தி என்பதே எனது நிலைப்பாடும்.

தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் உள்ளது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிமுக குரல் கொடுக்கும்" என்று பேசியிருக்கிறார்.

கிண்டி: ரயில்வே நிலைய மேம்பாலம் அருகே நிலவும் சுகாதார சீர்கேடு; முகம் சுளிக்கும் மக்கள்!

சென்னையின் மையத்தில் உள்ள மிக முக்கியமான கிண்டி ரயில் நிலையத்தில், ரேஸ் கோர்ஸ் சாலை மற்றும் கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைமேடை உள்ளது.அதில் ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள இந்த... மேலும் பார்க்க

"எனது சொந்தக்காரர் 100 கோடிக்கு நிலம் வாங்கினாரா?" - பத்திரப்பதிவு சர்ச்சைக்கு அமைச்சர் விளக்கம்!

பழனி அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6-ஆம் தேதி தனிநபர்கள் இருவரின் பெயர்களில் வெறும் ரூ. 2 கோடிக்கு முறைகேடாகப் பத்திரப்பதி... மேலும் பார்க்க

காவல் மரணம்: சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகிக்கு ஒரு சட்டமா? - உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருளான குட்கா விற்பனை செய்ததாகக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைது செய்யப்பட்டபோது நல... மேலும் பார்க்க

E20 : `நீங்களோ நானோ, காரின் மைலேஜை சரியாக கணக்கிட முடியாது!' - அமைச்சர் நிதின் கட்கரி புது விளக்கம்

எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களின் மைலேஜ் குறைவதாகப் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு காரின் எரிபொருள் சிக்கனத்தை அதன் உரிமையாளர் தாமாகவே துல்லியமாகக் கணக்கிட முடியாது என்றும், அ... மேலும் பார்க்க

ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் மோதும் அமெரிக்க - ஈரான்! போருக்கு காரணமான அமைதி ஒப்பந்தம்?

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பாகிஸ்தானின் முன்னெடுப்பில் கையெழுத்தான தற்காலிகப் போர்நி... மேலும் பார்க்க