`டி.என்.பி.எஸ்.சி.யில் அரசியல் தலையீடா?' - முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் என்ன சொல்க...
அன்று 2,000 கோடி கடன், பாக்கெட் காலி; ஆனால் இன்று..! - எலான் மஸ்க்கின் வாழ்க்கைப் பாடம்
2008-ம் ஆண்டு. உலகப் பொருளாதாரம் சரிந்து கொண்டிருந்த நேரம். ஆனால் எலான் மஸ்க்கின் தனிப்பட்ட உலகம் அதைவிட மோசமாகச் சிதைந்து கொண்டிருந்தது. பொறியில் மாட்டிய எலியாய், மஸ்க் தன் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள தத்தளித்துக் கொண்டிருந்த நேரமது.
ஏன் இந்த நிலை?
வெறும் 6 ஆண்டுகளுக்கு முன்புதான் PayPal நிறுவனத்தை விற்று சுமார் ₹1500 கோடி ($180 மில்லியன்) சம்பாதித்திருந்தார். ஒரு சாதாரண மனிதனாக இருந்தால், அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் மஸ்க், அந்த மொத்தப் பணத்தையும் மூன்று ஆபத்தான கனவுகளில் முதலீடு செய்தார்:
SpaceX (விண்வெளி ஆய்வு) - ₹800 கோடிக்கு மேல்.
Tesla (எலக்ட்ரிக் கார்) - ₹500 கோடிக்கு மேல்.
SolarCity (சூரிய சக்தி) - ₹80 கோடி.
விளைவு? அவரிடம் வீட்டு வாடகைக்குக் கூடப் பணம் இல்லை.
"நான் மதிய உணவைக் கூட என் நண்பர்களின் ஆபீஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என் பாக்கெட்டில் இருந்தது வெறும் கடனட்டை (Credit Card) கடன்கள் மட்டும்தான்," என்று பின்னாளில் மஸ்க் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார்.

இருண்ட காலம்...
நிலைமை கைமீறிப் போனது. SpaceX-ன் முதல் மூன்று ராக்கெட்டுகளும் வெடித்துச் சிதறின. Tesla-வில் பணமே இல்லை. ஊழியர்களுக்குச் சம்பளம் போட முடியவில்லை. ஒரு பத்திரிக்கை, "Tesla’s Death Watch" (டெஸ்லாவின் மரணக் குறிப்பு) என்றே தலைப்பிட்டு, அது எந்தத் தேதியில் மூடப்படும் என்று கணித்துக் கொண்டிருந்தது.
அதே நேரத்தில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் புயல் வீசியது. அவரது மனைவி ஜஸ்டின் உடனான விவாகரத்து நடைமுறைகள் நடந்து கொண்டிருந்தன.
ஒரு நாள் இரவு, எலான் மஸ்க் தூக்கத்தில் அலறிக்கொண்டு எழுந்தார். அவரது உடல் எடையில் பாதி குறைந்துவிட்டது. கண்களில் கருவளையம்.
"நான் என் கனவில் கூட என் நிறுவனங்கள் அழிவதைப் பார்த்தேன். நான் என் முடியைப் பிய்த்துக்கொண்டு அழுத நாட்கள் அவை. என் நரம்புகள் வெடித்துவிடும் போல் இருந்தது." என்கிறார் மஸ்க்.
எல்லோரும் சொன்னார்கள்: "எலான், உன் கையில் இருக்கும் மிச்சம் மீதி பணத்தையாவது (சுமார் $40 மில்லியன்) வைத்துக்கொள். இல்லையென்றால் நடுத்தெருவுக்கு வந்துவிடுவாய்."
ஆனால் எலான் பின்வாங்கவில்லை... "என்னுடைய பேபால் பணம் மொத்தமும் தீர்ந்துவிட்டது. நான் வாடகை கொடுக்கக் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். ஆனாலும், என் கடைசி நம்பிக்கை சாகும் வரை நான் விடப்போவதில்லை," என்று முடிவு செய்தார்.
தன்னிடம் எஞ்சி இருந்த கடைசி 40 மில்லியன் டாலர்களையும் (இதுவும் முதலீட்டாளர்கள் மற்றும் கடன்கள் மூலம் திரட்டப்பட்டது), திவாலாகும் நிலையில் இருந்த டெஸ்லாவில் முதலீடு செய்தார். தன்னிடம் இருந்த வீடு, கார் என அனைத்தையும் விற்றார்.

விடியல்...
அந்தத் தைரியம் வீணாகவில்லை. 2008 கிறிஸ்துமஸ் ஈவ் (டிசம்பர் 24). மாலை 4 மணி. SpaceX திவாலாவதற்குச் சரியாக 2 நாட்கள் முன்பு, அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா-விடமிருந்து அந்த அழைப்பு வந்தது. $1.6 பில்லியன் (சுமார் ₹12,000 கோடி) ஒப்பந்தம்!
எலான் மஸ்க் அந்தத் தொலைபேசியை வைத்ததும், "ஐ லவ் யூ கய்ஸ்!" என்று கத்தினார். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அதே நாளில், டெஸ்லாவின் முதலீட்டாளர்களும் பணத்தைக் கொடுக்கச் சம்மதித்தார்கள்.
எலான் மஸ்க் மீண்டு வந்தார். வெறும் பணக்காரராக அல்ல; வரலாற்றின் மிகப்பெரிய பணக்காரராக!

பிசினஸ் ஓனர்களே, இதிலிருந்து நாம் கற்க வேண்டியது என்ன?
எலான் மஸ்க் ஒருமுறை சொன்னார்: "நீங்கள் தோல்வியைச் சந்திக்கவில்லை என்றால், நீங்கள் போதுமான அளவு புதிதாக எதையும் முயற்சிக்கவில்லை என்று அர்த்தம்."
ஆனால், அவர் எடுத்ததெல்லாம் குருட்டுத்தனமான ரிஸ்க் அல்ல. அது "திட்டமிட்ட ரிஸ்க்". அவர் தன்னிடம் இருந்த பணத்தை (Liquidity) எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்திருந்தார். தான் நன்றாக சம்பாதித்தபோதே சொத்துக்களையும் சேர்த்து வைத்திருந்தார். அதனாலேயே கையில் பணம் இல்லாதபோதும், அவரால் முதலீட்டை ஈர்க்க முடிந்தது.
நீங்கள் பிசினஸ் ஓனரா? இன்று உங்கள் நிலை என்ன?
எலான் மஸ்க் போல ஒரு நெருக்கடி வந்தால், உங்களால் அதைத் தாங்க முடியுமா?
உங்கள் பர்சனல் அக்கவுண்டில், பிசினஸ் சாராத பணம் (Liquid Cash) இருக்கிறதா?
அல்லது எல்லாவற்றையும் பிசினஸில் போட்டுவிட்டு, "கடவுளே" என்று உட்கார்ந்திருக்கிறீர்களா?
நிதி மேலாண்மை (Financial Management) என்பது ஒரு கலை. எலான் மஸ்க்கின் தைரியம் வேண்டும்; ஆனால் வாரன் பஃபெட்டின் புத்திசாலித்தனமும் வேண்டும்.
வெற்றி பெற்ற பிசினஸ் ஓனர்கள் தங்கள் தனிப்பட்ட நிதியை எப்படி நிர்வகிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா?
தொழில்முனைவோருக்கான இலவச மாஸ்டர் கிளாஸ்:

தலைப்பு: Personal Finance Management Basics – பிசினஸ் ஓனர்களுக்கான பிரத்யேக வகுப்பு
வழங்குபவர்: ஆனந்தம் செல்வகுமார் (நிறுவனர், மாருதி பவர் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ்)
நாள்: பிப்ரவரி 11, 2026 (புதன்) | நேரம்: மாலை 07:00 மணி
முக்கியம்: மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்' வழங்கும் இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் 25 இடங்கள் மட்டுமே உள்ளன.
எலான் மஸ்க் போல, உங்கள் நிதி வாழ்க்கையின் ஹீரோவாக மாற இன்றே இணையுங்கள்.
இலவசமாகப் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்: https://labham.money/events/webinar-feb11-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_feb11_2026

















