செய்திகள் :

"அப்போ அப்பாவின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை; இப்போ.."- மூன்றாவது டாக்டர் பட்டத்தைப் பெற்ற மம்மூட்டி

post image

நடிகர் மம்மூட்டி, தற்போது அவருடைய மூன்றாவது கௌரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றுள்ளார். கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் இந்திய சினிமாவிற்கு மம்மூட்டி ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த உயரிய டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவித்திருக்கிறது.

Mammootty
Mammootty

கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மம்மூட்டிக்கு இந்த டாக்டர் பட்டத்தை வழங்கினார்.

டாக்டர் பட்டம் பெற்றபின் மேடையில் பேசிய மம்மூட்டி, "என்னுடைய தந்தை என்னை ஒரு உண்மையான மருத்துவராகப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஆனால், அவர் உயிரோடு இருந்தபோது என்னால் அவரது ஆசையை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இன்று எனக்குக் கிடைத்திருக்கும் மூன்றாவது டாக்டர் பட்டம் இது. என்னால் மருத்துவ ரீதியாக மக்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் போயிருக்கலாம்.

ஆனால், கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக எனது திரைப்படங்கள் மூலமாக உங்களை மகிழ்வித்து, உங்களது மனங்களைக் குணப்படுத்தி வருகிறேன் என்று நம்புகிறேன். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இதை நான் தொடர்ந்து செய்வேன்" எனப் பேசியிருக்கிறார்.

Mammootty - Viswanath Arlekar
Mammootty - Viswanath Arlekar

இதனைத் தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்திலும், "மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த மறக்க முடியாத பயணத்தில் என்னுடன் நின்ற ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இது நடிகர் மம்மூட்டிக்கு மூன்றாவது டாக்டர் பட்டம். இதற்கு முன் கேரளப் பல்கலைக்கழகம் மற்றும் காலிகட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்தும் கடந்த 2010-ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'கடுமையான மன உளைச்சல்' - 'த்ரிஷ்யம் 3' படத்தினால் இடுக்கியைச் சேர்ந்தவருக்கு நேர்ந்த சிக்கல்!

மோகன்லால் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'திரிஷ்யம் 3' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் இயக்குநர் ஜீத்து ஜோசப் ஆகியோருக்கு எதிராக இடுக்கியைச் சேர்ந்த ஒருவர் காவல் துறையில் பு... மேலும் பார்க்க

"தனித்துவமான நடிப்பு பாணியை உருவாக்கிய கலைஞன் சலிம்குமார்"- வி.டி.சதீசன், பினராயி விஜயன் புகழஞ்சலி!

300-க்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்து பல்வேறு விருதுகளை பெற்ற பிரபல மலையாள நடிகர் சலிம்குமார் மறைவுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன், எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ... மேலும் பார்க்க

மிமிக்ரி கலைஞர்... நகைச்சுவை நடிகர் டு காங்., ஆதரவாளர் - நடிகர் சலிம்குமார் உடல்நலக் குறைவால் மரணம்!

மலையாளத் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர் மற்றும் குணச்சித்திரக் கலைஞராக மக்கள் மனங்களை வென்ற தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் சலிம்குமார் (57) காலமானார். சிறுநீரகக் கோளாறு காரணமாக எர்ணாகுளம் அமிர்தா ம... மேலும் பார்க்க

Salim Kumar: பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் காலமானார் - மலையாள திரையுலகினர் இரங்கல்

பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் நேற்றைய தினம் காலமானார். இவருக்கு வயது 56. கடந்த சில காலமாகவே கல்லீரல் தொடர்பான நோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக க... மேலும் பார்க்க

சினிமாவில் பயன்படுத்தப்பட்ட இளைஞரின் மொபைல் எண்; படக்குழுவுக்கு எதிராக வழக்குக்கு உத்தரவிட்ட கோர்ட்!

நடிகர் குஞ்ஞாக்கோ போபன் நடிப்பில் வெளியான ‘ஆப்பீசர் ஆன் டியூட்டி’ மலையாள சினிமாவில் ஒரு காட்சியில் பெண் மருத்துவர் ஒருவர் பயன்படுத்தும் மொபைல் எண் காண்பிக்கப்பட்டது. வழக்கமாக சினிமாவுக்காக டம்மி நம்பர... மேலும் பார்க்க

'ஜிஹாதி' அவதூறு முதல் போலீஸ் விசாரணை வரை; மலையாளத் திரையுலகை உலுக்கும் த்ரிஷ்யம் நடிகை விவகாரம்

மலையாளத் திரையுலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நடிகை அன்சிபா ஹாசன் மற்றும் நடிகர் டினி டாம் இடையேயான மோதல் சர்ச்சையாகியிருக்கிறது.நடிகர் டினி டாம், நடிகை அன்சிபா ஹாசன் மீது தனிப்பட்ட விரோதம் மற்றும்... மேலும் பார்க்க