தேனி: "எங்களின் தாகம் தீர்த்தவர் ஜான் பென்னிகுயிக்" - பொங்கல் வைத்து கொண்டாடும்...
"அம்மா அதை நினைவூட்டியிருக்கிறார்!" - நடிகை ஊர்வசியின் மகள் தேஜலக்ஷ்மி
நடிகர் ஊர்வசியின் மகளான தேஜலக்ஷ்மி சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார்.
மலையாளத்தில் 'சுந்தரியாயவள் ஸ்டெல்லா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஊர்வசியுடன் 'பாப்லோ பார்ட்டி' என்ற திரைப்படத்திலும் இவர் இணைந்து நடித்து வருகிறார்.

மகள் நடிக்க வருவது குறித்து இவருடைய தந்தை மனோஜ் கே ஜெயன் பேசியிருந்த காணொளி வைரலானது பலருக்கும் நினைவிருக்கலாம்.
இந்நிலையில் நடிப்பின் பக்கம் வரும்போது தாய் தந்தையர் கொடுத்த அட்வைஸ் குறித்து மலையாளத்தில் வெளிவரும் வனிதா பத்திரிகைக்கு பேட்டியளித்திருக்கிறார்.
தேஜலக்ஷ்மி கூறுகையில், “நான் எப்போதுமே விஷயங்களை லேசாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டவள்.
சிறு வயதிலிருந்தே பெரும்பாலான சூழ்நிலைகளை அதிகம் யோசிக்காமல், அமைதியாக அணுகுவது என்னுடைய பழக்கம்.
சினிமாவுக்குள் வரும் முடிவை எடுத்ததும் அம்மாவும் அப்பாவும் ஒழுக்கம் பற்றி மிகத் தெளிவாக சொல்லித் தந்திருக்கிறார்கள்.
இந்தத் துறையில் ஒழுக்கம் அவசியம் என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளனர்.
நேரத்திற்கு முன்பாகவே சென்று சேர்வது, கொடுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே இருப்பது, நீண்ட நேர ஷூட்டிங்குகளுக்கு ஏற்றவாறு சரிசெய்து கொள்வது போன்றவற்றை குறித்து எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

காட்சிகள் எப்படி வருகின்றன என்பதைப் பற்றி அதிகமாக கவலைப்பட வேண்டாம் என்று என் அம்மா அறிவுரை வழங்கினார்.
செட் முழுவதும் உள்ள அனைவரையும் சமமாக நடத்த வேண்டும், மரியாதை காட்ட வேண்டும், அனைத்து குழு உறுப்பினர்களையும் மதிக்க வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறார்.
‘சினிமாவும் நம்முடைய வீடுதான், அதில் இருப்பவர்கள் அனைவரும் நமது குடும்ப உறுப்பினர்கள்’ என்று அவர் எனக்கு அடிக்கடி நினைவூட்டுவார்" எனக் கூறியிருக்கிறார்.



















