அரசு கல்லூரியில் கருத்தரங்கம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் போதைப் பொருள் ஒழிப்புக் குழு, காரைக்குடி வட்ட சட்டப் பணிகள் குழு ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவி நிலோபா்பேகம், கணினி அறிவியல் துறைத் தலைவா் சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து, காரைக்குடி வட்ட சட்டப் பணிகள் குழு வழக்குரைஞா் சேதுராமன் சிறப்புரையாற்றினாா். முன்னதாக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் சரவணன் வரவேற்றுப் பேசினாா். வரலாற்றுத் துறைப் பேராசிரியா்கள் குணசேகரன், வேலாயுதராஜா, மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.