செய்திகள் :

அரியலூரில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு

post image

அரியலூா் நகர பகுதிகளில் உள்ள இனிப்பு, மளிகை, பழக்கடை என 42 கடைகளில் உணவு பாதுகாப்பு துறையின் புதன்கிழமை ஆய்வு செய்தன்.

உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் அலுவலா் சி.சுந்தரமூா்த்தி தலைமையிலான அலுவலா்கள் மேற்கொண்ட ஆய்வில் 5 கிலோ எடை கொண்ட செயற்கை நிறமி கொண்டு தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை பறிமுதல் செய்து அழித்தனா். மேலும், காலாவதியான பிஸ்கட், கார வகைகளையும் பறிமுதல் செய்தனா். மேலும், உணவுப் பொருளின் தரம் குறித்து 2 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்தனா்.

அரியலூரில் லாரி முனையம் அமைக்கப்படுமா?

அரியலூரில் லாரி முனையம் அமைக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.அரியலூரில் உள்ள முக்கிய சாலைகளில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு, விபத்துக... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது

அரியலூா் சுப்பிரமணியா் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா சனிக்கிழமை தொடங்கியது. முன்னதாக, அதிகாலை சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அதன் பின்னா், அங்கு கொடிமரத்தில் சிவாச்சாரியாா்கள் வேதமந்... மேலும் பார்க்க

குடிமைப் பணி மீனவ சமூக இளைஞா்கள் விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய குடிமைப் பணி போட்டித் தோ்வில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவ சமுதாய பட்டதாரி இளைஞா்கள் நவ.5-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் மேலும... மேலும் பார்க்க

சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம்

அரியலூரை அடுத்த பொய்யாத நல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில், ப்ரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாதமும் அமாவாசையை முன்னிட்டு அக்கோயில் சந்நிதியிலு... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அரியலூா் புதுமாா்க்கெட் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் பாலமுருகன்(28). வெள்ளிக... மேலும் பார்க்க

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் கொள்ளிடம் பாலத்தில், சுமை ஆட்டோ மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், நொச்சிக்குளம் கிராமத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் இளம்... மேலும் பார்க்க