செய்திகள் :

"அவரை நான் மீட் பண்ணினப்போ!" - 'முதல்வன் Meets முதல்வர்' தருணம் பற்றி அர்ஜூன்!

post image

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்திருக்கும் 'ப்ளாஸ்ட்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

சமீபத்தில் நடிகர் அர்ஜுன் முதல்வர் விஜய்யை நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

Blast Movie
Blast Movie

அர்ஜுனின் 'முதல்வன்' படத்தின் சில காட்சிகளை, நடப்பு அரசியல் நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுச் சமூக வலைதளப் பக்கங்களில் பலர் பதிவிட்டு வருகிறார்கள்.

'ப்ளாஸ்ட்' திரைப்படத்திற்காக விகடனுக்கு அளித்த பேட்டியில், முதல்வர் விஜய் உடனான சந்திப்பு பற்றிப் அர்ஜூன் பகிர்ந்திருக்கிறார்.

அர்ஜுன் பேசுகையில், "'முதல்வன்' படத்தின் கதை ரஜினி சார், விஜய்-க்குச் சொன்ன பிறகுதான் எனக்குச் சொல்லப்பட்டது. ஒருவேளை நான் அந்தப் படத்துல நடிக்கலைனா நிச்சயமாக மிஸ் பண்ணியிருப்பேன்.

ஏன்னா, அது அவ்வளவு அருமையான திரைப்படம். அவ்வளவு சுலபமாகவும் அந்த கேரக்டர்ஸ் நமக்குக் கிடைச்சிடாது. 'முதல்வன்' திரைப்படத்தை சமகால அரசியலோடு பொருத்திப் பதிவிடுகிற சமூக வலைதளப் பதிவுகளைப் பார்க்கும்போது ரொம்ப நல்லா இருக்கு. அவரை நான் சமீபத்துல மீட் பண்ணியிருந்தேன்.

அர்ஜூன்
அர்ஜூன்

அவரை நான் மீட் பண்ணின அப்போ, 'ரொம்ப பெருமையாக இருக்கு. நம்ம திரைத்துறையிலிருந்து இன்னொரு முதல்வர்.

இதுவொரு சாதனை. கட்சி தொடங்கிச் சந்தித்த முதல் தேர்தலிலேயே இப்படியான ஒரு வெற்றி உங்களுக்குக் கிடைச்சிருக்கு'னு என்னுடைய வாழ்த்துகளைச் சொன்னேன்.

கடவுள் அவருக்குப் பெரிய வலிமையைக் கொடுக்கணும். அவர் முன்னால நிறைய பொறுப்புகள் இருக்கு" எனக் கூறினார்.

Double Occupancy Review: 6-6 ஆண்; 6-6 பெண் சுவாரஸ்யமான ஒன்லைன் - படமாக பாஸாகிறதா?

பல வருடங்களாகக் குழந்தையில்லாமல் தவிக்கிறது ஒரு தம்பதி (போஸ் வெங்கட் - வினோதினி). கடவுளை நம்பாத போஸ் வெங்கட், கைகூப்பி கடவுளை வணங்கி வேண்டுகிறார். கடவுளின் அருளால் ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்... மேலும் பார்க்க

Habeebi Review: தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் பின்னணியில் ஓர் அழகான காதல் கதை; ஆனால், படமாகக் கவர்கிறதா?

தென் தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக நெசவுத் தொழிலை யூசுஃப் கானின் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கவனித்து வருகிறார்கள். கைத்தறித் தொழில் நலிவடைந்து வருவதால், யூசுஃப் கானின் தம்பி வளைகுடா நாட்டிற்குப் பணிக்க... மேலும் பார்க்க

Bharathiraja: "துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி" - பாரதிராஜா மனைவி சந்திர லீலா

இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று முன்தினம் (ஜீன்.10) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் நேற்று சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள காட் ரோட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலைய... மேலும் பார்க்க

பாரதிராஜா: ``உங்கள் மகனை உங்கள் மடியில் ஒப்படைத்துவிட்டோம்" - கவிஞர் வைரமுத்து உருக்கம்

இயக்குநர் இமயம் பாராதிராஜா மறைந்த நிலையில், அவரின் உடல் அவரின் சொந்த கிராமத்தில் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து தன் எக்ஸ் பக்கத்தில்,``பிறந்த... மேலும் பார்க்க

What To Watch: 'கருப்பு', 'டபுள் ஆக்குபன்சி', ஹபீபி' - இந்த வார ரிலீஸ்கள் என்னென்ன?

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள்.டபுள் ஆக்குபென்சி - தமிழ்குஷ்பு தயாரிப்பில், அறிமுக இயக்குநரான அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்... மேலும் பார்க்க

Bharathiraja: 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் நல்லடக்கம் | Photo Album

பாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்க... மேலும் பார்க்க