செய்திகள் :

'ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் டு கல்விக்கடன் ரத்து' - 2ம் கட்ட வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி

post image

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது.

இது ஒருபுறம் இருக்க தேர்தல் அறிக்கை (வாக்குறுதிகள்) தொடர்பானப் பேச்சுகளையும் அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

குறிப்பாக திமுக ஆட்சியில் மாதந்தோறும் 1000 ரூபாயாக வழங்கப்படும் மகளிர் உதவித்தொகை அதிமுக ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் இலவச பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை இன்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

*சிறுபான்மையினர் மகளிருக்கு வட்டி இல்லாக் கடன்

* ஜல்லிக்கட்டு நடத்த 5 லட்சம் மானியம்

* மாற்றுதிறனாளிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி

* முதியோருக்கான ஓய்வூதியம் ரூ. 2000

* ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசம்

* மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்

* ஜல்லிகட்டில் உயிரிழப்போருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும்

*கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கான மாத உதவித் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்

*மாற்றுத் திறனாளிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்

போன்ற வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார்.

"அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று என்று கேட்பதில் தவறு கிடையாது!" - சொல்கிறார் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம்... மேலும் பார்க்க

ராகுலா, பிரியங்காவா? - கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் காங்கிரஸ் தலைமைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக கரு... மேலும் பார்க்க

"அந்த போன்கால் வரட்டும்!" - காத்திருக்கும் அறிவாலயம்

நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாள... மேலும் பார்க்க

DMK - ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' - கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து, காலியாக உள்ள 37 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வேட்புமனு துவங்கி, மாரச் 16-ம் தேதி... மேலும் பார்க்க

`அமித் ஷா நடிக்கலாம்; ராஜ்யசபா தேர்தலை நடத்த அவசரம் காட்டுவதற்கு இதுதான் காரணம்!' - மாணிக்கம் தாகூர்

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாகவே மாநிலங்களவையில் காலி ஆகும் இடங்களுக்கு தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல... மேலும் பார்க்க