`Congress, IUML-க்கு வராத விமர்சனம் VCK-வுக்கு மட்டும் வருகிறது எனில்.!' - அமைச்...
ஆன்மிகம் டு நட்பு; நோ சொன்ன இளம்பெண்; AI மூலம் ஆபாசமாக சித்திரித்த சொற்பொழிவாளர் - கைதுசெய்த போலீஸ்!
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சுமித் சர்மா என்பவருடன் சமூக ஊடகம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. சுமித் சர்மா ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் ஆன்மிகம் தொடர்பாக அந்தப் பெண்ணுடன் சாட்டிங் செய்து வந்தார். சுமித் தன்னை ஒரு சாமியார் என்று காட்டிக் கொண்டார். ஆனால் நாளடைவில் சுமித் சர்மா, அந்தப் பெண்ணுடன் நெருங்கிய நட்புடன் பழக விரும்பினார்.
ஆனால் அதற்கு அப்பெண் மறுத்துவிட்டார். அப்படி இருந்தும் சர்மா அப்பெண்ணிற்கு தொடர்ந்து ஆன்லைன் மூலம் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார். ஆன்லைனில் அப்பெண்ணை தொடர்ந்து கொண்டே இருந்தார்.

அதோடு சர்மா, சம்பந்தப்பட்ட பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அப்பெண் மற்றும் அவர் தாயாரின் புகைப்படத்தைப் பதிவிறக்கம் செய்து அவற்றை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆபாசமாகச் சித்திரித்து சமூக ஊடகங்களில் வெளியிட ஆரம்பித்தார்.
இதற்காக இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம், யூடியூப், ஃபேஸ்புக் போன்றவற்றில் அப்பெண்ணின் பெயரில் 10 போலி கணக்குகளைத் திறந்து, அவற்றில் அப்பெண்ணின் சித்திரிக்கப்பட்ட ஆபாச படங்களை வெளியிட்டார். இது குறித்து தெரிய வந்தவுடன் அப்பெண் அகமதாபாத்தில் உள்ள சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் சர்மாவை தேடி வந்தனர். அவர் டெல்லியில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் கூறுகையில், ''செயற்கை நுண்ணறிவு மூலம் குற்றம் சாட்டப்பட்டவர், புகார்தாரர் மற்றும் அவர் தாயாரின் உருமாற்றப்பட்ட நிர்வாணப் புகைப்படங்களையும் காணொளிகளையும் போலி கணக்குகளில் பதிவேற்றியதுடன், புகார்தாரரை மனரீதியாகத் துன்புறுத்தும் மற்றும் சமூகத்தில் அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் அவற்றை பதிவிட்டுள்ளார். புகார்தாரரின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து அவர் மற்றும் அவர் தாயாரின் புகைப்படங்களைப் பதிவிறக்கம் செய்து, இப்படிச் செய்திருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.


















