செய்திகள் :

ஆரணி: வன்னியர் இட ஒதுக்கீடு கோரி பட்டதாரி இளைஞர் தற்கொலை - திமுக அரசு மீது அன்புமணி கடும் தாக்கு!

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன். இவரின் மனைவி பூங்கொடி. இவர்களுக்கு சதிஷ்குமார், விஜயகுமார் என இரு மகன்கள். இதில், மூத்த மகன் சதிஷ்குமார் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, கட்டட மேஸ்திரி வேலைச் செய்து வந்தார். இளைய மகன் விஜயகுமாரும் வேலூர் அரசு கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் படிப்பை கடந்த 2018-ம் ஆண்டில் முடித்துவிட்டு, அரசுப் பணிக்குத் தயாராகி, 7 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகளை எழுதிவந்தார். ஆனாலும், அரசுப் பணி அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால், மன உளைச்சலில் இருந்துவந்த விஜயகுமார் நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பட்டதாரி இளைஞர் விஜயகுமார்

`வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காதது தான், தற்கொலைக்குக் காரணம். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என்று தனது டைரியில் 20 பக்கங்களில் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார் விஜயகுமார். தூக்கில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்த விஜயகுமாரின் கையிலும் ஒரு கடிதம் இருந்தது. அதிலும், `வன்னியர் இட ஒதுக்கீடு வேண்டும்’ என்று ஸ்கெட்ச்சில் தனது கைப்பட எழுதியிருக்கிறார். கண்ணமங்கலம் போலீஸார், இளைஞர் விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், ``சமூகநீதி கிடைக்காமல் ஓர் இளைஞர் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. வேதனையில் மூழ்கிய அவரின் குடும்பத்தினரை ஆறுதல்படுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்’’ என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரின் அறிக்கையில், ``தி.மு.க ஆட்சியில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், பல ஆண்டுகளாக போராடியும் அரசு வேலை கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் மற்றும் மன உளைச்சலால் பட்டதாரி இளைஞர் விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு 1,405 நாள்களாகியும் வன்னியர் இட ஒதுக்கீடு வழங்காமல், தி.மு.க செய்த துரோகம் தான் ஒரு ஏழை பட்டதாரியை பலி வாங்கியிருக்கிறது.

விஜயகுமார் கைப்பட எழுதிய கடிதம்

தி.மு.க-வின் இந்த துரோகத்தை வன்னிய சமுதாயம் மன்னிக்காது. பட்டதாரி இளைஞரின் தற்கொலைக்கு தி.மு.க அரசு பொறுப்பேற்க வேண்டும். விஜயகுமாரின் ஆன்மாவும், தி.மு.க அரசின் துரோகத்தால் பாதிக்கப்பட்ட வன்னிய மக்களின் மனங்களும் தி.மு.க-வை மன்னிக்காது. அவர்களின் சாபம் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்தப்போவது உறுதி. சமூக நிலையிலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் காலம் காலமாக மிக மிகப் பின்தங்கிய நிலையிலுள்ள வன்னிய மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான உள் இடஒதுக்கீட்டை வென்றெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. எனவே, வன்னிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தற்கொலை போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று காட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

'அவர்' மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா? - சு.வெ

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில், பெருந்தமிழர் விருது பெற்ற எஸ்.வி.ராஜதுறை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி பேசுகையில், "விகடனுடைய 'பெருந்தமிழர்' விருது பெறுகிற தோழர் எஸ்.வி.ஆர்., நம் சமகாலத்தின... மேலும் பார்க்க

``தோப்புக்கரணம் போடு என்றால், நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் பழனிசாமி’’ - ஸ்டாலின் கடும் தாக்கு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மண்டலவாடியில், தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

'த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகையை பாஜக தடுக்க பார்க்கிறது என்று திமுகவினர் முட்டாள்தனமான பேசுகிறார்கள். ... மேலும் பார்க்க

'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!' – காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா

``தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்...”புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷ... மேலும் பார்க்க

`அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்; அப்படி வந்தால்தான்...' - அன்பில் மகேஸ்

திருச்சி, திருவெறும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எதிரணியினருக்குதான் தேர்தல் பயம். மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யா... மேலும் பார்க்க

அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி

`ஆட்சியில் பங்கு'அரசியல் ஆடுபுலி 05ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிற கோரிக்கையோடு, அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரசும், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சினைத் தொடங்... மேலும் பார்க்க