’தேவதைக்குத் தந்தையாகியுள்ள பிரேம்ஜிக்கு வாழ்த்துகள்’ - வல்லமை பட இயக்குநர் நெகி...
``இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்று அறிவிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேவையில்லை" - RSS மோகன் பகவத்
இந்தியா இந்துக்களின் தேசம், இந்து ராஷ்டிரம், பாரதம் என்று ஆர்.எஸ்.எஸ் தொடர்ச்சியாகக் கூறி வருகிறது.
இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் வரலாற்றில் 3 முறை, காந்தி படுகொலை, எமர்ஜென்சி, பாபர் மசூதி இடிப்பு ஆகிய சம்பவங்களின்போது தடைசெய்யப்பட்டது. சமீபத்தில் நூற்றாண்டு விழா கண்டது.
இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்று அறிவிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.

கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மோகன் பகவத், ``இந்து என்பது வெறும் மதச் சொல் மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுக் கால கலாசார தொடர்ச்சியில் வேரூன்றிய நாகரிக அடையாளம்.
பாரதம் என்பதில் பெருமை கொள்பவர்கள் அனைவரும் இந்துக்கள்தான். பாரதம், இந்து ஆகிய இரண்டு சொற்களும் ஒத்த சொற்கள்தான்.
இந்தியா ஒரு 'இந்து ராஷ்டிரம்' என்று அறிவிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேவையில்லை. அதன் நாகரிக நெறிமுறைகள் ஏற்கனவே அதைப் பிரதிபலிக்கின்றன.
யாரையும் எதிர்க்கவோ அல்லது தீங்கு செய்யவோ ஆர்.எஸ்.எஸ் உருவாக்கப்படவில்லை, மாறாக குணநலன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி இந்தியாவை உலகளாவிய தலைவராக மாற்றுவதற்குப் பங்களிக்கவே ஆர்.எஸ்.எஸ் உருவாக்கப்பட்டது.
பன்முகத்தன்மைக்கு மத்தியில் பாரதத்தை ஒன்றிணைக்கும் வழிமுறைதான் ஆர்.எஸ்.எஸ் என்று அழைக்கப்படுகிறது" என்று கூறினார்.

சமீபத்தில் மோகன் பகவத், ``ஒரு சில திராவிட கட்சிகள் அவர்களுக்கென வகுத்துக் கொண்ட சில கொள்கைகளுக்கு ஏற்றவாறு அரசியல் சூழலை மாற்றி வைத்திருக்கின்றனர்.
பொதுவெளியில் வேண்டுமானால் அவர்கள் இந்துக்கள் இல்லை எனச் சொல்லலாம். ஆனால், அவர்களின் இதயங்களுக்குத் தெரியும் அவர்கள் இந்துக்கள் என்று.
திராவிட கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் இயற்கையிலேயே இந்துக்கள்தான். அரசியலுக்காக மட்டும்தான் அவர்கள் திராவிட கொள்கைகளைப் பேசுகிறார்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.



















