செய்திகள் :

இந்தியா கூட்டணி: ``மோடி அரசை வீழ்த்த ஒற்றுமை அவசியம்!" - மல்லிகார்ஜுன கார்கே

post image

டெல்லியில் திங்கட்கிழமை (இன்று) எதிர்க்கட்சிகளின் 'இந்தியா கூட்டணி'யின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க மற்றும் ஆம் ஆத்மி ஆகிய முக்கிய கூட்டணிக் கட்சிகள் இக்கூட்டத்தைப் புறக்கணித்துள்ளதாலும், கூட்டணியில் காங்கிரஸின் செயல்பாடு குறித்து சில கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 23 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தியா கூட்டணிக்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் - டெல்லி
இந்தியா கூட்டணிக்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் - டெல்லி

குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, விசிக தலைவர் தொல். திருமாவளவன், என்சிபி எம்பி சுப்ரியா சுலே உள்ளிட்டப் பலர் பங்கேற்றனர். அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக கட்சிக்கு இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை.

இந்தக் கூட்டத்தில் தலைவர்களை வரவேற்றுப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் கூட்டணியின் பலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

குறிப்பாக, கடந்த ஏப்ரல் 17 அன்று மக்களவையில் அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிப்பதற்காக அனைத்து கூட்டணிக் கட்சிகளும் கைகோர்த்து உறுதியுடன் நின்றன. இப்போது நாம் அந்த ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும். மத்தியில் ஆளும் மோடி அரசின் கீழ் நாடு எதிர்கொண்டு வரும் அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் வெளியுறவுக் கொள்கை சார்ந்த சவால்களை முறியடிக்க எதிர்க்கட்சிகளின் பலத்த ஒற்றுமை அவசியம். SIR நடைமுறை என்ற பெயரில் லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு வருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.

இந்தியா கூட்டணிக்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் - டெல்லி
இந்தியா கூட்டணிக்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் - டெல்லி

எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்தவும், பழிவாங்கவும் மத்திய அரசு புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. பா.ஜ.க அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரச் சூழல் மிகவும் மோசமாக உள்ளது. இளைஞர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போதிய முதலீடுகள் இல்லை. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. நீட் மற்றும் CBSE போன்ற பொதுத் தேர்வுகளை மத்திய அரசு கையாண்ட விதம், லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்துக்கு துரோகம் இழைத்துள்ளது." எனக் கடுமையாக சாடினார்.

``இந்தியாக் கூட்டணியின் கூட்டத்திற்கு திமுக வராததற்குக் காரணம் இதுதான்" - திருமாவளவன் பளீச்

டெல்லியில் நடைபெற்ற இந்தியாக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில்,... மேலும் பார்க்க

``இந்தியாக் கூட்டணிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இவைதாம்" - என்ன சொல்கிறார் வைகோ?

டெல்லியில் நடைபெற்ற இந்தியாக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, ம.தி.மு.க தலைவர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்தியாக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ம... மேலும் பார்க்க

இந்திரா காந்தி டு மோடி வரை; தேசிய அரசியலில் திமுக-வின் கதாபாத்திரம் என்ன? - விரிவான அலசல்

தேசிய அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்களிப்பும் அதன் கூட்டணி வரலாறும் இந்திய அரசியல் களத்தில் மிகவும் முக்கியமானவை. 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்ற முழக்கத்தை முதன்மையாகக்... மேலும் பார்க்க

"ஹிட்லர்தான் எனது உத்வேகம்" - சர்ச்சையான தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சு; பாஜக கண்டனம்!

பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற 'தி இந்து' நாளிதழின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக உருவாக்கப்பட்ட 'ஹை... மேலும் பார்க்க

TASMAC: விகடன் செய்தி எதிரொலி... உடனடியாக மூடப்பட்ட முதல்வர் விஜய் தொகுதி டாஸ்மாக் கடை!

விகடன் இணையதளத்தில் வெளியான செய்தியின் எதிரொலியாக முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் பள்ளி மற்றும் சர்ச் அருகேயிருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டுவிட்டது.நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் த... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணி: திமுக-காங்கிரஸ்-க்கு இடையே விரிசல்; அழைக்கப்படாத தவெக! - என்ன நடக்கிறது?

சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் பின்னடைவுகளுக்குப் பிறகு, தங்களின் அடுத்தகட்ட அரசியல் உத்திகளை வகுக்கவும், ஒற்றுமையை வெளிப்படுத்தவும் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா கூட்டணி' இன்று டெல்லியில் உள்ள கான்ஸ்டிடிய... மேலும் பார்க்க