செய்திகள் :

இந்தியா பெயர் கொண்ட அணியில் ஆடிய கபடி வீரருக்கு பாகிஸ்தான் தடை! - என்ன நடந்தது?

post image

பஹ்ரைனில் தனியார் போட்டியில் இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக பாகிஸ்தானிய சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை காலவரையின்றி தடைசெய்து பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு உத்தரவிட்டிருக்கிறது.

பாகிஸ்தான் வீரர்
பாகிஸ்தான் வீரர்

பஹ்ரைனில் 'ஜிசிசி கோப்பை' (GCC Cup) என்ற பெயரில் தனியார் கபடி தொடர் (டிச.16)நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளின் பெயரில் தனியார் அணிகள் கலந்து கொண்டன. இதில் ஒரு அணிக்கு 'இந்தியா' என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்த அணிக்காக பாகிஸ்தான் வீரர் உபைதுல்லா ராஜ்புத் களமிறங்கினார்.

அவர் இந்திய ஜெர்சி அணிந்து விளையாடிய புகைப்படங்களும், இந்தியக் கொடியை அசைப்பது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் பாகிஸ்தானிய சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு தடை செய்திருக்கிறது.

பாகிஸ்தான் வீரர்
பாகிஸ்தான் வீரர்

தான் விளையாடப் போகும் அணி இந்திய அணி என்பது தனக்குத் தெரியாது என்றும், இது ஒரு தவறான புரிதல் என்றும் உபைதுல்லா ராஜ்புத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் உபைதுல்லா ராஜ்புத்,"கடைசிவரை அவர்கள் அணிக்கு இந்திய அணியின் பெயர் சூட்டியது எனக்குத் தெரியாது, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பெயர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று நான் ஏற்பாட்டாளர்களிடம் கூறினேன். கடந்த காலங்களில் தனியார் போட்டிகளில், இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒரு தனியார் அணிக்காக ஒன்றாக விளையாடியுள்ளனர்" என்று தெரிவித்திருக்கிறார்.

'நீங்க அதிர்ஷ்டம்னு சொன்னா தலைகீழாதான் செய்வேன்!' - ஸ்ரேயாஸ் ஐயர் சுவாரஸ்யம்!

அபுதாபியில் ஐ.பி.எல் மினி ஏலம் நடந்து வருகிறது. ஏல அரங்கில் பஞ்சாபின் மேஜையில் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் அமர்ந்திருக்கிறார். கடந்த சீசனில் அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதிப்போட்டி வரை அழ... மேலும் பார்க்க

IPL 2026 Auction: '14 கோடிக்கு சென்னை வாங்கிய 19 வயது இளம் வீரர்!' - யார் இந்த கார்த்திக் சர்மா?

அபுதாபியில் நடந்து வரும் மினி ஏலத்தில் சென்னை அணி சர்ப்ரைஸுக்கு மேல் சர்ப்ரைஸாக கொடுத்து வருகிறது. வழக்கமாக இளம் வீரர்களை நோக்கி பார்வையைத் திருப்பாத சென்னை அணி, இந்த முறை பிரஷாந்த் வீர் என்ற வீரரை ரூ... மேலும் பார்க்க

CSK : ஜடேஜாவுக்கு ரீப்ளேஸ்மென்டாக சிஎஸ்கே ரூ.14 கோடிக்கு அள்ளி வந்த பிரஷாந்த் வீர்! - யார் இவர்?

அபுதாபியில் நடந்து வரும் ஐ.பி.எல் மினி ஏலத்தில் Uncapped வீரரான பிரஷாந்த் வீரை சென்னை அணி 14.20 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது. அவரின் அடிப்படை விலை 30 லட்சம்தான். சென்னை இவ்வளவு பெரிய தொகையை ... மேலும் பார்க்க

Auqib Dar : 'ரூ.30 லட்சம் டு 8 கோடி!' - வியக்க வைத்த காஷ்மீர் வீரர்! - யார் இவர்?

அபுதாபியில் நடந்து வரும் மினி ஏலத்தில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் தர் ஏல அரங்கையே வியக்க வைத்திருக்கிறார். அடிப்படை விலையாக 30 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்த இவரை டெல்லி அணி... மேலும் பார்க்க

F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற கென்ய வீரர் ஷேன் சந்தாரியா | Photo Album

F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள்F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள்F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள்F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள்F4 இந்தியன் சாம்... மேலும் பார்க்க

"கேரம் வீராங்கனை கீர்த்தனாவின் சாதனை; இந்த மூன்று கோரிக்கைகளை அரசு நிறைவேற்றணும்" - பா.ரஞ்சித்

7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025 டிசம்பர் 2 முதல் 6 வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது.இதில் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா மகளிர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் மகளிர் குழுப் போட்டி ஆகிய ம... மேலும் பார்க்க