செய்திகள் :

'இந்திய சினிமா மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான பாரதிராஜாவை இழந்திருக்கிறது!' - நடிகர் சிரஞ்சீவி

post image

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், " இந்திய சினிமா தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான பாரதிராஜா அவர்களை இழந்திருக்கிறது.

கிராமத்து மண்ணின் வாசனை, மனித உறவுகளின் அழகு, காதலின் அப்பாவித்தனம் மற்றும் சாமானிய மக்களின் உணர்ச்சிகளை காலத்தால் அழியாத சினிமா கவிதைகளாக மாற்றியவர் அவர்.

பாரதிராஜா
பாரதிராஜா

அவருடைய திரைப்படங்கள் லட்சக்கணக்கான இதயங்களைத் தொட்டதோடு, தலைமுறை தலைமுறையாகப் பல திரைப்பட இயக்குநர்களுக்கும் ஊக்கமளித்தன.

மரியாதைக்குரிய பத்மஸ்ரீ மற்றும் பல தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்ற பாரதிராஜாகாருவின் பங்களிப்பு இந்திய சினிமாவிற்கு அளப்பரியது.

'ஆராதனா' திரைப்படத்தில் 'புலிராஜு' என்ற கதாபாத்திரத்தில் அவருடைய இயக்கத்தின் கீழ் பணியாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. சினிமா மீதான அவரது ஆர்வம், எளிமை மற்றும் தனது கலை மீதான அவரின் அர்ப்பணிப்பு ஆகியவை என் மனதில் நீங்காத முத்திரையைப் பதித்துள்ளன.

சிரஞ்சீவி - பாரதிராஜா
சிரஞ்சீவி - பாரதிராஜா

அவர் இப்போது நம்மோடு இல்லை என்றாலும், அவருடைய அசாதாரணமான திரைப்படங்களின் மூலம் அவரது மரபும் புகழும் என்றும் நிலைத்திருக்கும்.

'இயக்குநர் இமயம்' பாரதிராஜா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

Jayaram: "அப்போ நான் அவர்கிட்ட போய் மன்னிப்புக் கேட்டேன்'' - தன் காதல் கதையைப் பகிர்ந்த ஜெயராம்

நடிகர் ஜெயராம் நடிப்பில் கடந்த வாரம் 'பரிமளா & கோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அப்படத்திற்காக நம் சினிமா விகடன் சேனல் நடத்திய பிரத்யேக 'விகடன் பிரஸ் மீட்' நிகழ்வில் ஜெயராம் கலந்துகொண்டு ... மேலும் பார்க்க

Nooru Saami: "பசியோட இருக்காத, பண உதவி பண்றேன்னு..." - ஏ.ஆர். முருகதாஸ்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க

Nooru Saami: "'உன்னை பார்க்கும்போது ரவுடி மாதிரி தெரிஞ்ச'னு சசி சார் சொன்னார்!" - பா. ரஞ்சித்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க

Double Occupancy Review: 6-6 ஆண்; 6-6 பெண் சுவாரஸ்யமான ஒன்லைன் - படமாக பாஸாகிறதா?

பல வருடங்களாகக் குழந்தையில்லாமல் தவிக்கிறது ஒரு தம்பதி (போஸ் வெங்கட் - வினோதினி). கடவுளை நம்பாத போஸ் வெங்கட், கைகூப்பி கடவுளை வணங்கி வேண்டுகிறார். கடவுளின் அருளால் ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்... மேலும் பார்க்க

Habeebi Review: தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் பின்னணியில் ஓர் அழகான காதல் கதை; ஆனால், படமாகக் கவர்கிறதா?

தென் தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக நெசவுத் தொழிலை யூசுஃப் கானின் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கவனித்து வருகிறார்கள். கைத்தறித் தொழில் நலிவடைந்து வருவதால், யூசுஃப் கானின் தம்பி வளைகுடா நாட்டிற்குப் பணிக்க... மேலும் பார்க்க

Bharathiraja: "துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி" - பாரதிராஜா மனைவி சந்திர லீலா

இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று முன்தினம் (ஜீன்.10) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் நேற்று சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள காட் ரோட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலைய... மேலும் பார்க்க