இந்திய வானிலை ஆய்வு மையத்தில் வேலைவாய்ப்பு: ரூ.1 லட்சம் சம்பளம் - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?
இந்திய வானிலை மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
அசிஸ்டன்ட், திட்ட ஆராய்ச்சியாளர் 2, திட்ட ஆராய்ச்சியாளர் 3 போன்ற வெவ்வேறு பிரிவுகளில் திட்ட அதிகாரிகள் பணி. இது ஓராண்டிற்கான தற்காலிக பணி ஆகும். பணி நன்கு செய்தால், இந்தக் காலம் நீட்டிக்கப்படும்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 134
வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயது (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.29,200 - 1,23,100

ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் அனுபவம் தேவைப்படுகிறது. அது குறித்து விரிவாக தெரிந்துகொள்ள பக்கம் 2 - 15 பார்க்கவும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஷார்ட்லிஸ்டிங், நேர்காணல்.
விண்ணப்பம் தொடங்கும் நாள்: நவம்பர் 24, 2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 14, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!


















