` நிதிஷுக்கு 20 ஆண்டுகள் கொடுத்தது போதும்' - மகனை முதல்வராக்க பீகார் மக்களிடம் ல...
“இந்த ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் திருப்திகரமாக இல்லை”- குற்றம்சாட்டும் கிருஷ்ணசாமி
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த 6 மாதங்களாக தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள கிராமங்கள்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் ஏழை எளிய மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய குடிநீர், தெருவிளக்கு, வாறுகால், மயானம் உள்ளிட்ட வசதிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு இருப்பதைக் கண்கூடாக காணமுடிகிறது.

கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்வதற்காக கடந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தாலும்கூட, ஊராட்சிகளில் பல்வேறு விதமான தவறான மனநிலைகளோடு அணுகியதன் விளைவாக பல கிராம ஏழை, எளிய மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது.
ஏற்கெனவே கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு விதமான விரும்பதகாத சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த ஓராண்டுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி அவரது தோழர் முன்னிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்பட்டு அது இந்தியா முழுவதும் எதிரொலித்து, அதன் விளைவாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தொடர்ந்து அதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட கோவை விமான நிலையம் அருகே 19 வயது பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற குற்றம் செய்யபவர்களுக்கு காவல்துறை மீது அச்சம் ஏற்படாமல் இருப்பது கவலைக்குறியதாக இருக்கிறது. வரும் 2026-ம் ஆண்டு தேர்தல் தொடர்பாக நான் சிந்திக்கவே இல்லை. தற்போது கிராமப்புறங்களுக்கு சென்று மக்களைச் சந்திக்கிறோம். கட்சியை பலப்படுத்தும் பணிகள் நடக்கின்றன.
தேர்தல் குறித்து 2026 ஜனவரி 7-ம் தேதி மதுரையில் நடக்கும் மாநாட்டுக்கு பின்னரே முடிவெடுப்போம். மாநாட்டில், தமிழகத்தில் ஆட்கொல்லியாக, கிராமப்புறங்களின் பொருளாதாரத்தை சீரழிக்கும் மதுவை ஒழிக்க பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும். கனிம வளக்கொள்ளையை கண்டித்தும், படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளை முன்வைத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாட்டு மக்களுக்கு விடிவுகாலத்தை உருவாக்கக்கூடிய ஆட்சி அமைப்பது எங்களது சிந்தனையில் உள்ளது. இந்த ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் திருப்திகரமாக இல்லை. இலவசப் பேருந்து அவர்களது விளம்பரத்துக்காக இயக்குகின்றனர். மக்கள் போக்குவரத்து வசதிக்காக கேட்டுகின்றனர். இலவசப் பேருந்தை அவர்கள் கேட்கவில்லை. இதை போல பல விஷயங்கள் இருக்கின்றன.” என்றார்.

















