செய்திகள் :

"இந்த விழிப்புணர்வை உலகெங்கும் உள்ள அனைத்துப் பெண்களுக்கும்..!" - நடிகை சமந்தாவின் புதிய பிசினஸ்

post image

திரைப்பிரபலங்கள் பலரும் சினிமாவைத் தாண்டி பல்வேறு பிசினஸ்களை நடத்தி வருகிறார்கள். பெரும்பாலான திரைப்பிரபலங்கள் சொந்தமாகவே உணவகங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களைத் தாண்டி இன்னும் பலர் பல்வேறு துறைகளில் அவர்களின் பிசினஸைத் தொடங்கிச் சிறப்பாகவே நடத்தி வருகிறார்கள்.

அதோடு, வளர்ந்து வரும் பிராண்டுகளிலும் முதலீடு செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை சமந்தா தற்போது புதிய பிசினஸ் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். ஏற்கெனவே அவர் சில பிசினஸ்களைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

அதோடு, இப்போது 'ஜாய்' எனப்படும் பெண்களுக்கான மாதவிடாய் மற்றும் ஆரோக்கியப் பராமரிப்பு பிராண்ட் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.

சமந்தா
சமந்தா

மகேஸ்வரி மூர்த்தி என்பவரும், நடிகை சமந்தாவும் இணைந்து இந்த புதிய பிராண்டைத் தொடங்கியிருக்கிறார்கள்.

'Antibacterial Sanitary Pads', 'Herbal Sanitary Pads', 'Herbal Wellness Liners', 'Disposable Period Panties', 'Reusable Menstrual Cups', 'Reusable Period Panties' ஆகிய பொருள்கள் இந்த பிராண்டிலிருந்து இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த புதிய பிசினஸ் குறித்து நடிகை சமந்தா, "என்னுடைய ஆரோக்கிய வாழ்க்கையில் மாதவிடாய் காலத்தில் நாம் பயன்படுத்தும் பொருள்கள் குறித்து நாம் எவ்வளவு குறைவாகத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதை நான் கவனித்தேன்.

மாதந்தோறும் நம் உடலோடு நேரடியாகத் தொடர்பில் இருக்கும் ஒரு பொருள் எதனால் தயாரிக்கப்படுகிறது, அது நம் ஆரோக்கியத்தை எப்படிப் பாதிக்கிறது என்ற கேள்விகளை நாம் கண்டிப்பாகக் கேட்க வேண்டும்.

ரசாயனங்களின் பாதிப்பைக் குறைத்து, பெண்களின் சௌகரியத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தரும் தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற ஜாய் (ZOY) நிறுவனத்தின் லட்சியம்தான் என்னை இதில் இணைய வைத்தது.

வெறும் தயாரிப்புகளைத் தாண்டி, சுழற்சி ஆரோக்கியம் (Cycle Wellness) குறித்த ஒரு பெரிய உரையாடலை நாம் உருவாக்க விரும்புகிறோம்.

சமந்தா
சமந்தா

மாதவிடாய் சுழற்சியைப் புரிந்துகொள்வது, அது பெண்களின் ஆற்றலையும் மனநிலையையும் அன்றாட வாழ்க்கையையும் எப்படிப் பாதிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது, உடலுக்கு எதிராகச் செயல்படாமல் உடலின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வேலை செய்வது போன்ற விஷயங்கள் இன்னும் அதிக கவனத்தைப் பெற வேண்டும்.

இந்த நிறுவனம் மூலமாக இந்த விழிப்புணர்வை உலகெங்கும் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் கொண்டு சேர்க்க நாங்கள் நம்புகிறோம்," எனத் தெரிவித்திருக்கிறார்.

"அந்தப் புத்தகத்தைக் கொடுக்கத்தான்" - ரஜினியுடனான சந்திப்பு குறித்து நயினார் நகேந்திரன் விளக்கம்

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று (ஜூன்.16) சந்தித்தார். பிரதமர் மோடி​யின் 12 ஆண்​டு​கால சாதனை​கள் குறித்த சிறப்புப் புத்​தகங்​களை ரஜினி​காந்த்திற்... மேலும் பார்க்க

Heartin: `விஜய் படமா? உதயநிதி படமா? யார் படம் புடிக்கும்?' - தங்கம் தென்னரசு மகள் இமையா பதில்

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசின் மகளான இமயா 'ஹார்ட்டின்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஜூன் 26 திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை... மேலும் பார்க்க

Habeebi: "அஜித் கேரக்டரில் நான் நடிக்க வேண்டியது!" - அனுபவம் பகிரும் டி.வி தொகுப்பாளர் ஷாகுல் ஹமீது

இஸ்லாமியர்களின் வாழ்வியலை முழுமையாகப் பேசும் தமிழ் படைப்பாக வெளிவந்திருக்கிறது மீரா கதிரவனின் 'ஹபீபி'. இந்தப் படத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஷாகுல் ஹமீதும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஊ... மேலும் பார்க்க

`உங்களுக்கு வேண்டாம் என்று தோன்றினால்.!' - `கருப்பு' படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து ஆர்யா

தமிழ் - மலையாளம் பைலிங்குவல் திரைப்படமாக, ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கிறது 'அனந்தன் காடு' திரைப்படம். இந்தப் படம் ஜூன் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடைசியாக ஆர்யா நடிப்பில் 'மிஸ்டர் எக்ஸ்... மேலும் பார்க்க

Love Oh Love: "பவிஷூடைய குரல் சில சமயங்களில் தனுஷ் குரல் மாதிரியே இருக்கும்" - கே.எஸ். ரவிக்குமார்

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷின் சகோதரி மகனான பவிஷ் நாயகனாக 'லவ் ஓ லவ்' என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியானது. படத்தி... மேலும் பார்க்க

Love Oh Love: "செல்வா சார் வீட்டுல பாசமாதானே இருப்பாரு எதுக்கு பயப்படுறாஙகனு நினைச்சேன்!" - பவிஷ்

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷின் சகோதரி மகனான பவிஷ் நாயகனாக 'லவ் ஓ லவ்' என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியானது. படத்தி... மேலும் பார்க்க