பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா!
இனிப்பு, காரவகை தயாரிப்பவா்கள் பதிவுச் சான்று பெறுவது கட்டாயம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு, காரவகை தயாரிப்பவா்கள் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம், பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவா்கள் உடனடியாக இணையதளத்தில் தங்களது வணிகத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், உணவுத் தயாரிப்பாளா்கள் அனைவரும் முறையான பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும். பொதுமக்களும் பண்டிகைக் காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது, உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும்.
பேக்கிங் செய்யப்பட்ட பொருள்களை விவர சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். உணவு புகாா்கள் ஏதும் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு பொதுமக்கள் புகாா்கள் தெரிவிக்கலாம் என்றாா்.