செய்திகள் :

இன்ஸ்டா நட்பு; தன்பாலின உறவு - திருமணத்திற்கு மறுத்த பார்ட்னரை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர்

post image

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள நாகபள்ளி என்ற இடத்தை சேர்ந்த சதீஷ்குமார்(30) என்பவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சூரஜ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி இன்ஸ்டாகிராம் மூலம் சாட்டிங் செய்து கொண்டனர். அவர்களது நட்பு நாளுக்கு நாள் அதிகரித்து ஒரு கட்டத்தில் அது தன்பாலின உறவாக மாறியது.

இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தனர். இதனால் சூரஜ் சதீஷ்குமாரிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டார். ஆனால் சதீஷ்குமார் திருமணத்திற்கு தயக்கம் காட்டினார். சதீஷ்குமாருக்கு ஏற்கனவே சொந்த ஊரில் திருமணமாகிவிட்டது.

ஊரில் கேரேஜ் தொழில் செய்து வந்தார். திருமணத்திற்கு மறுத்ததால் நேரில் பார்த்து சம்மதிக்க வைக்கலாம் என்று கருதி சூரஜ் ஒடிசாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலிக்கு வந்தார்.

கட்சிரோலிக்கு வந்த பிறகுதான் சதீஷ்குமாருக்கு ஏற்கனவே திருமணமான விவகாரம் சூரஜிற்கு தெரிய வந்தது. ஆனாலும் இரண்டு நாட்கள் சதீஷ்குமாருடன் சூரஜ் இருந்தார். சூரஜ் தனது கிராமத்திற்கு புறப்பட முடிவு செய்தார்.

சதீஷ்குமார் அவரை தனது காரில் அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அழைத்து சென்றார். தேவ்டா என்ற கிராமத்திற்கு வந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சதீஷ்குமார் தன்னிடம் ஏற்கனவே திருமணமான விசயத்தை மறைத்துவிட்டதாக கூறி சூரஜ் வாக்குவாதம் செய்தார்.

இந்த வாக்குவாதம் முற்றியது. இதனால் சூரஜ் தன்னுடன் எடுத்து வந்திருந்த கத்தியை எடுத்து சதீஷ்குமாரை குத்தினார். அவர் சதீஷ்குமாரை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் குமார் இறந்துவிட்டார். அங்கிருந்து சூரஜ் தப்பித்து செல்ல முயன்றார். ஆனால் கிராம் மக்கள் அவரை பிடித்து அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க

திறந்துக் கிடந்த வீட்டின் கேட்; சாலைக்குத் தவழ்ந்து வந்த குழந்தை; சாமர்த்தியமாகச் செயல்பட்ட டிரைவர்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டியிலிருந்து வலியபறம்பு செல்லும் 'சபா மர்வா' என்ற தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. பேருந்து கிணறுபடி என்ற பகுதியில் வளைவான சாலையில் பேருந்து சென... மேலும் பார்க்க

இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி - முதல்வரை உலுக்கிய சம்பவம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ர... மேலும் பார்க்க

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! - யார் இந்த அபிஷேக் அசீர்?

ஜூலை 13-ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் 24 வயதேயான அபிசேக் அசீர். திருநெல்வேலி பாளை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் அசீர... மேலும் பார்க்க

மும்பை: `28,000 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள்' - அதானியைத் தொடர்ந்து களமிறங்கும் அம்பானி

மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு... மேலும் பார்க்க