செய்திகள் :

`இரட்டை இன்ஜின் அரசு தேவை.. திமுக ஆட்சியின் கவுன்ட்டவுன் ஆரம்பம்!'- மதுராந்தகத்தில் பிரதமர் மோடி உரை

post image

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``பாரதா மாதா வாழ்க... என் சகோதர சகோதரிகளே வணக்கம். 2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் என் முதல் பயணமாக ஏரி காத்த ராமர் பூமியான மதுராந்தகம் வந்துள்ளேன். இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள், நேதாஜியோடு சுதந்திர போராட்டத்தில் பல தமிழர்கள் பங்கேற்றனர்.

வீரம், நாட்டுப்பற்று தமிழக மக்களின் நாடி, நரம்புகளில் நிறைந்துள்ளது. 2026-ல் எனது முதல் பயணம் இது. NDA கூட்டணியை மக்கள் விரும்புகின்றனர். ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது. மேடையில் உள்ள தலைவர்களே தமிழக எதிர்காலத்தைத் தீர்மானிப்பார்கள். தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்த ஊழலற்ற ஆட்சியை அமைக்க வேண்டும். திமுக ஆட்சிக்கான கவுன்ட்டவுன் ஆரம்பம்.

கரப்ஷன், மாஃபியா, கிரிமினல் போன்ற விஷயங்களுக்கு ஆதரவு கொடுக்கும் அரசு இது. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் ஊழல் இருக்கிறது என்று குழந்தைகளுக்கும் தெரியும். இங்கு ஒரு குடும்பத்துக்கான ஆட்சி நடக்கிறது. ஜனநாயகம் அற்ற அரசு இது. கலாசாரத்தை வசைப்பாடுகிறது திமுக அரசு. திமுக-வின் கொடூர ஆட்சியில் இருந்து தமிழகத்தை விடுவிப்போம்.

11 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு மும்மடங்கு நிதியை நாங்கள் தந்திருக்கிறோம். காங்கிரஸ் அளித்த நிதியை விட மும்மடங்கு அதிகமாக அளித்திருக்கிறோம். வரலாறு காணாத வளர்ச்சியை பாஜக அரசு கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி இப்போது பின்னோக்கி செல்கிறது. தமிழ்நாட்டுக்கு இரட்டை இன்ஜின் அரசு தேவை என்று மக்கள் விரும்புகின்றனர்.

விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் NDA கூட்டணி ஆதரவாக இருக்கும். தமிழ்நாட்டு வளர்ச்சியில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கண்முன்னே போதைக்கு சீரழிகிறார்கள் நம் குழந்தைகள். மத்திய அரசுடன் இணைந்த மாநில அரசு வேண்டும்.

குற்றங்களைக் கட்டுக்குள் வைத்திருந்தார் ஜெயலலிதா. சிறப்பாக செயல்பட்டார் அவர். தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக தான். தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை நேசிக்கிறேன். வாக்கு வங்கி அரசியலை திமுக நடத்துகிறது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை திமுக பிரச்னையாக்கியது திமுக. தமிழகத்தை வளர்ச்சி நோக்கி நகர்த்த மாற்றம் தேவை" என்று திமுகவை விமர்சித்து பேசியிருக்கிறார்.

" 'டபுள் இன்ஜின்' எனும் 'டப்பா இன்ஜின்' தமிழ்நாட்டில் ஓடாது!"- மோடிக்கு ஸ்டாலின் பதிலடி

மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.அப்போது பேசிய பிரதமர் மோடி, ``தமிழ்நாட்டுக்கு 'டபுள் இன்ஜின்' சர்க்கார் தேவ... மேலும் பார்க்க

"பங்காளி சண்டை தீர்ந்துவிட்டது; முழு மனதோடு வந்திருக்கிறோம்"- NDA கூட்டத்தில் டிடிவி பேசியது என்ன?

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், "தமிழ்நாட்டில் நடைபெறும் மக்கள் விரோத, குட... மேலும் பார்க்க

`210 இடங்களில் நம் கூட்டணி வெற்றிபெற்று அதிமுக ஆட்சியமைக்கும்!' - NDA கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``இந்திய திருநாடே மதுராந்தகத்தை நோக்கிப் ... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிற பாஜக-வை எமது மக்கள் எப்போதும் ஆதரிக்க மாட்டார்கள்!" - ஜோதிமணி

"எந்த முகத்தை வைத்துக் கொண்டு பா.ஜ.க-வும், நரேந்திர மோடியும் இங்கு வாக்கு கேட்டு வருகிறார்கள்?. தமிழ்நாடே தண்ணீரில் மிதந்தபோது, புயல் வீசியபோது எட்டிக்கூடப் பார்க்காத பிரதமருக்கு இப்போது மட்டும் இங்க... மேலும் பார்க்க

'கூட்டணிக்கு அவர் வேண்டாம் முதல்வரே!' - தூதுவிட்ட விசிக... குழப்பத்தில் திமுக!

தி.மு.க கூட்டணியில் இணைய ராமதாஸ் தரப்பு முண்டியடிக்கும் சூழலில், 'ராமதாஸ் நம் கூட்டணிக்கு வேண்டாம்' என முதல்வருக்கு வி.சி.க தூது அனுப்பியதாகச் சொல்கிறார்கள் அறிவாலயப் புள்ளிகள்.தந்தை - மகன் மோதலால் பா... மேலும் பார்க்க