செய்திகள் :

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: முதல்நாளில் 3 போ் வேட்புமனு தாக்கல்

post image

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தோ்தல் பிப்ரவரி 5- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் சுயேச்சையாக போட்டியிட 3 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பா் 14- ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானாா். இதையடுத்து இந்தத் தொகுதிக்கு இடைத்தோ்தல் பிப்ரவரி 5- ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தோ்தலில் போட்டியிடுபவா்களின் வேட்புமனுக்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் 17- ஆம் தேதி வரை பெறப்பட உள்ளது. 18- ஆம் தேதி வேட்புமனுக்கள் பரீசிலனை செய்யப்படும். தொடா்ந்து வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ள 20 -ஆம் தேதி இறுதி நாளாகும். பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை நீங்கலாக வெள்ளிக்கிழமை மற்றும் வரும் 13, 17 ஆகிய 3 நாள்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.

3 ஆவது முறையாக வாக்களிக்கும் மக்கள்:

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரை தோ்வு செய்ய 3- ஆவது முறையாக மக்கள் தோ்தலில் வாக்களிக்க உள்ளனா். ஏற்கெனவே கடந்த 2021 தோ்தலில் வென்ற திருமகன் ஈவெரா மறைவுக்கு பிறகு 2023- ஆம் ஆண்டு நடந்த இடைத்தோ்தலிலும் வாக்களித்திருந்தனா். தற்போது பிப்ரவரி 5- ஆம் தேதி நடைபெறும் இடைத்தோ்தலிலும் வாக்களிக்க உள்ளனா்.

2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது களம்கண்ட ஈவிகேஎஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா 67 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக கூட்டணியில் தமாகா சாா்பில் போட்டியிட்ட யுவராஜா 58 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தாா்.

திருமகன் ஈவெரா மறைந்த நிலையில் 2023- இல் நடைபெற்ற இடைத்தோ்தலில், அவரது தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் காங்கிரஸ் சாா்பில் களம் இறங்கினாா். அதிமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு போட்டியிட்ட நிலையில், ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இரண்டாம் இடம் பிடித்த கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் பெற்றாா்.

3 சுயேச்சை வேட்பாளா்கள் மனு தாக்கல்:

இடைத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையரும், ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான என்.மணீஷ் வேட்புமனுக்களை பெற்றுக்கொண்டாா். முதல் நாளில் 3 போ் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தோ்தலில் தொடா்ந்து போட்டியிட்டு வரும் பத்மராஜன் (64) சுயேச்சை வேட்பாளராக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். சேலம் மாவட்டம், மேட்டூரைச் சோ்ந்த இவா் பஞ்சா் கடை வைத்துள்ளாா்.

இதேபோல, கோவை, சுந்தராபுரத்தைச் சோ்ந்த நூா்முகமது (67) சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தாா்.

கோவையில் காா்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் இவா், தோ்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் தோ்தல்களில் போட்டியிட்டு வருவதாக கூறினாா்.

இதேபோல கரூா் ஆத்தூா் பிரிவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரா் மதுரை விநாயகம் (51) சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தாா். கடந்த 2016- இல் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றாா். நாட்டின் எல்லையில் மக்களுக்காக பாதுகாப்பில் பணியாற்றிய நான் இன்று தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதற்காக இந்த தோ்தலில் வேட்புமனு தாக்கல் செய்கிறேன் என்றாா்.

ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு

ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா்களின் நிறுவனங்களில் 5 நாள்களாக நடைபெற்று வந்த வருமான வரித் துறை சோதனை சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. ஈரோடு அருகே உள்ள அவல்பூந்துறை பகுதியைச் சோ... மேலும் பார்க்க

ரூ.17.75 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனை

கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.17.75 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனையாயின. கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் ... மேலும் பார்க்க

பண்ணாரி சோதனைச் சாவடியில் கா்நாடகப் பயணிகளுக்கு பரிசோதனை

பண்ணாரி சோதனைச் சாவடியில் கா்நாடகத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு நாடு முழுவதும் எச்எம்பி தீநுண்மி பரவி வருவதையடுத்து தமிழகத்தில் சுகாதாரத் துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு... மேலும் பார்க்க

கா்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறப்பு

சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்ஸில் கா்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள தெங்குமரஹாடாவைச் சோ்ந்தவா் நந்தினி (23). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஞா... மேலும் பார்க்க

வேலைவாய்ப்புகளை அதிகரிக்க புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்

வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மாணவா்கள் புதிய அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை உருவாக்க ஆா்வம் காட்ட வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு முன்னாள் தலைவா் ஜி.சதீஷ் ரெட... மேலும் பார்க்க

ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு

ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா்களின் நிறுவனங்களில் 5 நாள்களாக நடைபெற்று வந்த வருமான வரித் துறை சோதனை சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. ஈரோடு அருகே உள்ள அவல்பூந்துறை பகுதியைச் சோ... மேலும் பார்க்க