செய்திகள் :

ஈரோடு: குடும்பத்துடன் குளிக்கச் சென்ற இடத்தில் சோகம் - பரிதாபமாக பறிபோன 3 உயிர்கள்

post image

நாமக்கல் மாவட்டம் அவிநாசி பட்டியைச் சேர்ந்த தறிப்பட்டைறை தொழிலாளியான பெருமாள், மனைவி, குழந்தைகளுடன் பரமத்தி வேலூர் சித்தம்பூண்டிக்குச் சென்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குடும்பமாகச் சென்று காவிரி ஆற்றில் குளிக்க திட்டமிட்ட பெருமாளின் குடும்பத்தினர் , காவிரி ஆற்றின் தடுப்பணை அமைந்துள்ள பாசூர் பகுதிக்கு நேற்று மதியம் குளிக்கச் சென்றுள்ளனர்.

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த வேளையில் பெருமாளின் மனைவி கால் தவறி கீழே விழுந்து தண்ணீரில் மூழ்கிய நிலையில், காப்பாற்ற முயற்சி செய்த பெருமாளும் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் பெருமாள் உள்ளிட்ட 3 பேரை உயிருடன் மீட்க முயற்சி செய்தும் முடியாமல் போனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீரில் மூழ்கி உயிரிழப்பு

இது குறித்து காவல்துறையினர், " பெருமாள் குடும்பத்தினர் நண்பர்கள் என 6 பேர் நேற்று காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற நிலையில், பிரதீபா, பாரதி, லிகித், சுஜித் ஆகிய நால்வரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு‌குளித்துள்ளனர். பிரதிபா என்பவர் வழக்கி நீரில் மூழ்கியுள்ளார். மற்ற மூவரும் அவருடன் சேர்ந்து தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளனர்.

இதைக் கண்டுப் பதறிய பெருமாள், தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பற்ற முயற்சி செய்து அவரும் தண்ணீரில் மூழ்கியிருக்கிறார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் 5 பேரையும் மீட்டுள்ளனர். இரண்டு பேரை உயிருடன் மீட்ட நிலையில், பெருமாள், அவரின் மனைவி பிரதீபா, பாரதி ஆகிய மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்" என்றனர்.

திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து: பயணிகள் வெளியேற்றம்; என்ன நடந்தது?

முற்றிலும் ஏ.சி.பெட்டிகளைக் கொண்ட ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் நாட்டின் தலைநகரில் இருந்து மாநிலத் தலைநகரங்களுக்கு இயக்கப்படுகிறது. நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் நிஜாமுதினுக்கு... மேலும் பார்க்க

பிரபல ரெளடி பிறந்தநாளுக்காக நண்பர்களுக்கு வைத்த மது விருந்து பார்ட்டி - விபத்தில் 2 பேர் பலி!

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மன்பேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தளபதி(36). திருவையாறு, நடுக்காவேரி காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்கள் திருடி வந்த... மேலும் பார்க்க

ஆட்டுக்குட்டியை மீட்க முயன்று கிணற்றில் விழுந்த சிறுமி - செல்போன் சிக்னலை வைத்து மீட்ட காவல்துறை

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே உள்ள காருகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் தனுசியா (14). இவர், மேட்டுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு சேர்ந்துள்ளார். இந்நிலைய... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: கனமழையால் கோயில் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பலி, 13 பேர் காயம்

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் ஒடிந்து விழுந்தது. ஜாட் நகருக்கு அருகில் உள்ள மொடெவாடி என்ற கிராமத்தில் இருக்கும் கோய... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: கார் மீது லாரி மோதி கோர விபத்து; 4 பேர் உயிரிழந்த சோகம்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (37). இவர் தனது மனைவி மேனகா (35), மகள் கனிஷ்கா (17), மகன் சுர்ஷித் (12) மற்றும் உறவினர் சினேகா (23) ஆகியோர் உடன் ஒரு காரில் பொள்ளாச்சி பகுதிக்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ரீல்ஸ் மோகம்... குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உட்பட 4 மைனர் சிறார்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள கோலாப்புரி பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் அருகில் இருக்கும் தத்கேதா பகுதியில் இருக்கும் குளத்திற்கு சென்றனர். அவர்கள் விடுமுறையை மகிழ்ச்சி... மேலும் பார்க்க