செய்திகள் :

ஈரோடு: தீ வைத்துக் கொளுத்தப்பட்ட பயிர்கள்; `மாற்றுச் சமூகத்தினர்தான்...'- குமுறும் பட்டியலின விவசாயி

post image

ஈரோடு மாவட்டம், ஆர்.என்.புதூர், அமராவதி நகரைச் சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு உட்பட்ட விளை நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விலைகொடுத்து வாங்கியிருக்கிறார். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் தன்னுடைய விளை நிலத்திற்கான பாதையை அருகில் உள்ள மற்ற விவசாயிகள் தடுத்து நெல் சாகுபடி செய்ய முடியாமல் நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டி வந்துள்ளார்.

தீயில் கருகிய பயிர்கள்

அந்த நிலத்தில் தென்னை, வாழை மற்றும் தேக்கு மரங்களை நடவு செய்து பராமரித்து வந்திருக்கிறார். காலிங்கராயன் கால்வாயில் பாசனத்திற்கான தண்ணீர் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், நிலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில் தென்னை, தேக்கு மற்றும் வாழை மரங்கள் நேற்று திடீரென தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணிக்கம், தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுக்குள் கொண்டு வந்தாலும் மாணிக்கத்திற்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான மரங்கள் தீயில் கருகி நாசமடைந்துள்ளன. மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த மற்ற நிலத்தின் உரிமையாளர்கள் சிலர் தன்னுடைய பயிர்களை தீவைத்துக் கொளுத்தியிருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இது குறித்து விவசாயி மாணிக்கம், "நான் பட்டியலினத்தவர் என்பதால் இங்கு விவசாயம் செய்வதைத் தடுக்க, அருகில் உள்ள நில உரிமையாளர்கள் சாதிய துவேசத்துடன் நடந்து வருகிறார்கள். கடந்த ஆண்டும் இதேபோல நிலத்தில் சாகுபடி செய்த சோளப் பயிர்களை தீ வைத்து எரித்தார்கள்.

தீயில் கருகிய பயிர்கள்

இந்த முறையும் 200 தென்னங்கன்றுகள், 500 வாழை மற்றும் 300 தேக்கு கன்றுகளை தீ வைத்து எரித்திருக்கிறார்கள். `எங்களுக்குச் சரிசமமாக நீ எப்படி நிலம் வைத்திருக்கலாம்?' என மிரட்டுகிறார்கள். விவசாயம் செய்வதற்கான உரிமையையும் பாதுகாப்பையும் மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். கருங்கல்பாளையம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளேன்" என்கிறார்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க

சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.... மேலும் பார்க்க

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க