செய்திகள் :

ஈரோடு: மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு - விசாரணையில் வனத்துறை; நடந்தது என்ன?

post image

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலையில் உள்ள ஈரட்டி, கடை ஈரட்டி, ஒந்தனை உள்ளிட்ட வனப் பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றி, சிறுத்தை என வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இரவு நேரத்தில் உணவுதேடி வனத்திலிருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு மற்றும் தென்னமரங்களை சேதப்படுத்தி சாப்பிட்டு வந்தன. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வனத்துறையினரிடம் புகார் கூறியதால், விவசாய நிலத்துக்குள் நுழையும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க வனத்துறை அனுமதியுடன் ஒருசில விவசாயிகள் பேட்டரி மின்வேலி அமைத்துள்ளனர். ஆனால், அந்த பேட்டரி மின்வேலியையும் யானைகள் உடைத்து சேதப்படுத்துவதால், சிலர் சட்டவிரோதமாக வேலியில் நேரடியாக மின்சாரத்தை இணைக்கவும் செய்து வருகின்றனர். இதனால், உணவுதேடி விவசாய நிலத்துக்குள் நுழையும் வனவிலங்களுகள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது.

யானை உயிரிழப்பு

இந்நிலையில், புதன்கிழமை இரவு, ஈரட்டி வனப் பகுதியிலிருந்து வெளியேறிய சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று வைரவன் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்துக்குள் நுழைந்துள்ளது. அப்போது, அந்த விவசாய தோட்டத்தைச் சுற்றி வைரவன் வைத்திருந்த மின் வேலியில் சிக்கி அந்த யானை உயிரிழந்தது. இத்தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு, பர்கூர் வன அலுவலர்கள் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு, அதே இடத்தில் யானையை பிரேதப் பரிசோதனை செய்து புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "உணவுதேடி வந்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக விவசாய நிலத்தின் உரிமையாளர் வைரவனைப் பிடித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

காரியாபட்டி: ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு லஞ்சம்; பேரூராட்சி பொறியாளர் கைது!

மதுரை செல்லூரைச் சேர்ந்த பழனி குமார், ஒப்பந்தக்காரராக உள்ளார். இவர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கடந்த 2022 ம் ஆண்டு ரூ. 1 கோடியே 38 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு ஒப்பந்தம்... மேலும் பார்க்க

புதுச்சேரி: அடுத்தடுத்து சிக்கும் போலி மருந்து தொழிற்சாலைகள்! - கோடிக்கணக்கில் நாடு முழுவதும் சப்ளை

முன்னணி நிறுவனங்களின் மருந்துகள் போலியாக தயாரிப்புஇந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டியி... மேலும் பார்க்க

சேலம்: சாலை அமைக்கும் பணியில் தகராறு; மூதாட்டியைத் தாக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ; வீடியோ வைரல்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி பகுதியில் சாலை பணி நடக்கிறது. அங்கு வசிக்கும் மூதாட்டி சரோஜா வீட்டை ஒட்டி சாலை அமைக்க முயன்றுள்ளனர். அப்போது வீட்டை ஒட்டி போடாமல், அந்தப... மேலும் பார்க்க

``என்னை விட அழகா இருக்க கூடாது'' - 4 பேரை கொலை செய்த பெண்; திருமண வீட்டில் சோகம்

தன்னை விட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்று பெண்கள் நினைப்பது உண்டு. ஆனால் அந்த நினைப்பு காரணமாக ஹரியானாவில் பெண் ஒருவர் 4 சிறார்களை கொலை செய்துள்ளார். ஹரியானா மாநிலம் பானிபட் அருகில் உள்ள நெளல்தா பகு... மேலும் பார்க்க

சென்னை: மது பாட்டிலால் குத்திக் கொல்லப்பட்ட பெண் - லிவிங் டுகெதரில் இருந்த நபர் கைதான பின்னணி!

சென்னை வியாசர்பாடி ஹசிங்போர்டு பகுதியில் குடியிருந்தவர் பிரியங்கா (33). இவர், 31.11.2025-ம் தேதி மணலி பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் பீர்பாட்டிலால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறி... மேலும் பார்க்க

ஈரோடு: மூச்சுக்குழாயில் சிக்கிய வாழைப்பழம்; 5 நிமிடத்தில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

ஈரோடு மாவட்டம், அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம்-மகாலட்சுமி தம்பதியின் மகன் சாய்சரண் (5). நேற்று இரவு சிறுவன் சாய்சரணுக்கு அவரது பாட்டி வாழைப்பழத்தைச் சாப்பிடக் கொடுத்துள்ளார்.அதைச் சாப்பி... மேலும் பார்க்க