திருப்பூர்: கொங்கணகிரி முருகன் கோயில் சுவர்களில் மாணவக் கலைஞர்களின் வண்ண ஜாலம் |...
"உடன் பிறப்புகளின் வாக்குகளைப் பெற்று எங்களின் தயவில் தான் இந்த அரசு.!'- உதயநிதி ஸ்டாலின் உரை
இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசிவருகிறார்.
"முதல்வருக்கு திமுக சார்பாக எங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறோம். ஆட்சிபொறுபேற்று 40 நாட்கள் முடிந்துவிட்டது. ஆளுநர் உரையில் 40 நாட்களில் இந்த அரசு ஏதேனும் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்களா? என்று நானும் எங்களது சட்டமன்ற உறுப்பினர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தோம்.

ஆனால் எங்களுக்கு மிஞ்சியது வெறும் ஏமாற்றம் மட்டுமே. தமிழ்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுங்கள் என்று சொன்னேன். அதன்படி தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன்பிறகு மரபை மீறி தேசியகீதம் இரண்டு முறை பாடப்பட்டிருக்கிறது. ஆளுநர் உரை ரீல்ஸ் கன்டென்ட்டிற்கு உதவுமே தவிர ரியல் பிரச்னைகளுக்கு உதவுவதாகத் தெரியவில்லை.
ஆளுங்கட்சியின் நிறை குறைகளை சொல்வதுதான் எதிர்கட்சியின் வேலை. ஆனால் இப்போது இருக்கக்கூடிய ஆளுங்கட்சியை விமர்சனம் செய்வதில் முந்தைய எதிர்கட்சிகளை விட எங்களுக்கு அதிக பொறுப்பும், அதிக உரிமையும் இருக்கிறது.

அதற்கு காரணம் எங்களுடைய கூட்டணி கட்சியாக இருந்து எங்கள் உடன் பிறப்புகளின் வாக்குகளைப் பெற்று எங்களின் தயவில் தான் அரசு நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக சொல்லப்போனால் எங்களின் வாக்கு எதிர்கட்சியில் மட்டும் இல்லை. ஆளுங்கட்சியிலும் எங்களின் ஓட்டு இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினின் உரை தொடர்ந்து இதில் அப்டேட் செய்யப்படும்!












