பசுவைக் கடத்தினால் என்கவுன்ட்டர்: கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை
உதகை ரோஜா பூங்காவில் கவாத்து பணி
உதகை: ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, உதகை ரோஜா பூங்காவில் செடிகளை கவாத்து செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதம் நிலவும் இதமான கோடை காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவா். அவா்கள் கண்டு ரசிக்க ஏதுவாக ரோஜா பூங்காவில் கண்காட்சி நடைபெறும்.
நடப்பு ஆண்டு 20-ஆவது ரோஜா கண்காட்சி உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பூங்காவில் உள்ள 32,000 ரோஜா செடிகளில், 4, 201 ரோஜா ரகங்களை கவாத்து செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்தாா்.
இதில், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிபிலா மேரி, பூங்கா ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.