செய்திகள் :

உதயநிதி பிறந்தநாள் விழா: தனது சமுதாயத்தினரை மட்டும் அழைத்துச் சென்றாரா ஊட்டி இளைஞர் அணி அமைப்பாளர்?

post image

தமிழ்நாட்டின் துணை முதல்வரும் தி.மு.க-வின் மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கடந்த 27-ம் தேதி நடைபெற்றது.

கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

படுகர் சமுதாய இளைஞர்கள்

இந்த நிலையில், நீலகிரி மாவட்ட இளைஞரணி சார்பில் அதன் மாவட்ட அமைப்பாளர் இமயம் சசி என்பவர் தனது சமுதாயத்தைச் சேர்ந்த படுகர் இளைஞர்களை மட்டும் அழைத்துச் சென்று உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்றும், இளைஞரணி அமைப்பாளர் என்ற பதவிக்கு ஏற்ப பழங்குடி மற்றும் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களை அரவணைத்து உடன் அழைத்துச் செல்லவில்லை என்றும் அக்கட்சிக்குள் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன.

நீலகிரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளரின் இந்தச் செயல் கட்சிக்குள் பெரும் சர்ச்சையை எழுப்பி வருகிறது.

இது குறித்து நம்மிடம் தெரிவித்த அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர், "வாக்கு வங்கி அரசியலில் அடிப்படையாகக் கொண்டு படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் தற்போது மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர் சொந்த சமுதாய மக்களுக்கு மட்டுமே ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டும் கட்சிக்குள் நிலவி வருகிறது. இந்த நிலையில், படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த மாவட்ட இளைஞரணி அமைப்பாளரின் இந்தச் செயலும் மனக்கசப்பை ஏற்படுத்தியிருக்கிறது" என்றனர்.

இமயம் சசி
இமயம் சசி

இந்தக் குற்றச்சாட்டு குறித்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமயம் சசியைத் தொடர்பு கொண்டு கேட்டோம் , "துணை முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு கலாசார ரீதியில் வாழ்த்து அளிக்க வேண்டும் என்பதற்காகவே படுக சமுதாய இளைஞர்களுடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம்.

அதே வேளையில், அந்தச் கலாசார நிகழ்வுகளில் படுகர் அல்லாத மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களும் உடன் இருந்தனர். பிரிவினை போன்ற எந்த விதமான செயலுக்கும் இங்கு இடமில்லை" என்றார்.

திரண்ட அதிமுக, அமமுக பிரபலங்கள், வாழ்த்திய சசிகலா; ஜெயலலிதா உதவியாளர் வீட்டுத் திருமணம்

மறைந்த அஇஅதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த ரவிராஜின் மகள் திருமணம் ஒரத்தநாடு அருகே நேற்று நடந்தது.மறைந்த ஜெ ஜெயலலிதா முதல்வராவதற்கு முன் அவரிடம் உதவியா... மேலும் பார்க்க

"அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு இனிமேல் படையெடுத்து தான் வர வேண்டும்!" - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புறநகர் மற்றும் நகரப் பகுதிகளுக்கு செல்ல ஏழு புதிய பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற... மேலும் பார்க்க

புதிய மேயர் யார்? - மும்பை உட்பட மகா., முழுவதுமுள்ள 29 மாநகராட்சிளுக்கு வரும் ஜன.,15ம் தேதி தேர்தல்

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளின் பதவிக்காலம் கடந்த 2022ம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை... மேலும் பார்க்க